பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையும் புதுமைப்பித்தனும் 25 காசுக்கு வழியில்லை; கிடைத்த கொஞ்சநஞ்சம் காசும் அவரு டைய "பைத்தியக்கார வாழ்க்கை'க்குப் போதவில்லை. எல்லோருக் கும் ஒருவித பசி என்றால், புதுமைப்பித்தனுக்கு இரண்டுவிதப் பசி. ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று இலக்கியப் பசி!-இந்த நிலையில் உணர்ச்சி அவரை மேலும் மேலும் எழுத உந்தித் தள்ளிற்று அதற்கு ஓரளவாவது தெம்பு வேண்டாமா? அந்தத் தெம்பை அவர் உபயோகித்து வந்த புகையிலைதான் அவருக்கு மனமுவந்து அளித்தது. அந்த மகத்தான புகையிலையின் ஆதரவிலே அவர் எழுதி னார்; அந்த மகத்தான புகையிலையின் ஆதரவிலே அவர் வாழ்ந் தார் அந்த மகத்தான புகையிலையின் ஆதரவிலே அவர் செத்துத் தொலைந்தார்: இதுதான் தோழர் புதுமைப்பித்தனின் கதை. செட்டும் சிக்கனமுமாக இருத்திருந்தால் புதுமைப்பித்தன் தமக்குக் கிடைத்த வருமானத்திலேயே செளகரியமாக வாழ்ந்திருக் கலாம்' என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை, அப்படி வாழ்ந்தி ருந்தால் அவர் ரூபாய்க்கும் ரூபாய்க்கும் கல்யாணம் செய்து வைத்து, ரூபாய்க்கும் ரூபாய்க்கும் ரூபாயாகவே பிள்ளைபெற வைக்கும் வட்டிக்கடை முதலாளியாக ஆகியிருப்பார், ஒரனாச் சரக்கை, ஒரு ரூபாய் விலையுள்ள சரக்காக மாற்றும் ‘மாஜிக்' வியாபாரியாக மாறியிருப்பார், வாழ்க்கை வளத்தைவிடப் பணத் தின் வளத்தையே பிரதானமாகக் கருதி சோம்பேறித்தனத்தைத் தங்கள் வம்ச பரம்பரைச் சொத்தாக விட்டுச் செல்லும் சதிகாரர் களின் கூட்டத்திலே அவரும் சேர்ந்திருப்பார்!- எதிலும் மனத்தை எளிதில் பறிகொடுத்துவிடும் ஏமாளியாகவோ, எழுத்து வாழ்வதற் காகத் தன் வாழ்க்கையையே தத்தம் செய்துவிடும் எழுத்தாளனா கவோ, பணத்தை வெறும் விளையாட்டுக் கருவியாக மதிக்கும் பச்சிளங் குழந்தையாகவோ அவர் ஒரு நாளும் ஆகியிருக்க்மாட் டார்: புதுமை எதுவாயிருந்தாலும் அது முதலில் சிலருக்குப் பிடிக்கா மற் போவது இயல்பு. அந்த இயல்பை ஒட்டிச் சிலருக்குப்