பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வித்தன் கட்டுரைகள் புதுமைப்பித்தனின் கதை பிடித்தது; கருத்து பிடித்தது, தடை பிடிக்கவில்லை. புதுமைப்பித்தன் தம்முடைய நடையைப் பற்றித் தாமே கூறுகிறார்; கேளுங்கள் : 'கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தை களை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தா விச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன் அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது, அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதின் விளைவாகப் பாஷைக்குப் புதிது இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் புரியாது' என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா, கருத்து ஒட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை அதே முறையில் பலன் எழுதிய பின்புதான் முடிவுகட்ட முடிவும். அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம், அது செளகரி யக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல, பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன் இன்று திரும்பிப்பார்க்கும்போது, அவை உலக வளர்ச்சியில் பரிணாம வாதத்தினர் சொல்வது போல, இலக்கிய வளர்ச்சியின் தெருவடச் சான் சந்துகளாக அங்கேயே வளர்ச்சித்தன்மை மாறி நின்றுவிட் டன. இன்று அவற்றை ஆற அமரப் படித்துப் பார்த்துத்தான் முடிவு கட்டவேண்டும் எனது முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம், அதனால் முறை தப்பானது என்று முடிவு கட்டிவிடக்கூடாது ' இவ்வாறு தம்மைப் பற்றியும் சரி - பிறரைப் பற்றியும் சரி, எதையும் அழுத்தந்திருத்தமாக அஞ்சாநெஞ்சத்துடன் எடுத்து சொல் லிக் கொண்டுவந்த நண்பர் புதுமைப்பித்தனுக்கு, இன்று தமிழர்க ளிடம் நிதிகோரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தமிழ்ப் பெருமக்கள் இனியாவது ஒரு விதி செய்ய வேண்டும் 'என்ன விதி' என்று கேட்கிறீர்களா?-இதோ சொல்கி றேன். பணக்காரர்களுக்கு எழுத்தைப் பற்றிக் கவலை கிடையாது,