பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விந்தன் கட்டுரைகள் குக்காகவும், போட்டி பந்தயங்களுக்காகவும் நீங்கள் செலவழிக் கும் பணத்தில் ஒரு பகுதியை நல்ல புத்தகங்கள் வாங்குவதில் செலவழிக்க வேண்டும். கூடியவரை இரவல் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் புத்தகத்தின் சொந்தக் காரர்களும் இரவல் கொடுக்கும் வழக்கத்தை ஒரளவு குறைத்துக் கொள்ளவேண்டும், முடியுமானால் பஸ் பிரயாணிகள் சங்கம், சினிமா ரசிகர்கள் சங்கம் என்பவை போல நீங்கள் வட்டத்துக்கு ஓர் 'இலக்கிய ரசிகர்கள் சங்கம்' அமைத்து, 'வீட்டுக்கு ஒரு புத்தகசாலை' என்னும் இயக்கத்துக்குத் திட்டம் வகுக்க வேண்டும். அத்துடன் இலக்கிய ரசனையுள்ள நீங்கள், உங்கள் குடும்பத் திலுள்ள ஒவ்வொருவருக்கும் இலக்கிய ருசியை ஊட்ட முயற்சி செய்யவேண்டும் அவ்வாறு முயற்சி செய்தால் உங்களுடைய வாழ்க்கை மேலும் வளம் பெறும்; போலி நாகரிகத்திலுள்ள மோகமும் போட்டிப் பந்தயங்களிலுள்ள வேகமும் படிப்படியாகக் குறையும் ஒரு நாட்டின் நாகரிகத்தை அளவிடுவதற்கு அதனுடைய இலக்கிய வளர்ச்சிதான் அடிப்படையாயிருக்கிறது. அது மட்டு மல்ல, மிருகத்தன்மையுள்ள மனிதனை மனிதத்தன்மையுள்ள மனிதனாக மாற்றக் கூடிய சக்தி இலக்கியத்துக்குத்தான் இருக்கி நது அப்படி மாற்றினால் உங்களுக்கும் கூேடிமம், எழுத்தாளர்களா கிய எங்களுக்கும் கூேடிமம் அந்த நிலை வந்த பிறகு, எத்தனை பாரதிகள் பிறந்தாலும் அவர்களைக் கஞ்சாவால் கொல்ல முடியாது. எத்தனை புதுமைப் பித்தன்கள் பிறந்தாலும் அவர்களைப் புகையிலையால் கொல்ல முடியாது. ஆம், அவ்வாறு கொல்ல முடியுமென்று எல்லையில்லாத விஞ்ஞானமும், முடிவில்லாத ஆராய்ச்சிகளும் கூட இன்றுவரை