பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குப் பிடித்த புத்தகம் மார்க்ஸிம் கார்க்கி தாய்' ஒரு பெண் எதற்காகப் பிறக்கிறாள்? ஏன் வாழ்கிறாள். ஓர் ஆண் மகன் எதற்காகப் பிறக்கிறான்? ஏன் வாழ்கிறான்? அவர்கள் எதற்காகப் பிறக்கிறார்களோ, ஏன் வாழ்கிறார் களோ, அது எனக்குத் தெரியாது ஆனால் நம்முடைய நாவல்க ளைப் பொறுத்தவரை, அவர்கள் காதல் செய்வதற்கென்றே பிறக்கி றார்கள் கடைசியில் கல்யாணமோ, தற்கொலையோ செய்து கொள்வதற்கென்றே வாழ்கிறார்கள்: இடையில் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள்: கண்ணே உன்னைக் கண்டது முதல், எனக்குத் துக்கமே யில்லை. துணைப் பார்த்தாலும் உன்னைப் போலிருக்கிறது. துடைப்பத்தைப் பார்த்தாலும் உன்னைப் போலிருக்கிறது! என்கி றான் அவன். 'உங்களுக்கு மட்டுமா? எனக்கும் அப்படித்தான் கத்தரிக்கா யைப் பார்த்தாலும் உங்களைப் போலிருக்கிறது; கழுதையைப் பார்த்தாலும் உங்களைப் போல் இருக்கிறது' என்கிறாள் அவள், வேறு என்ன இருக்கிறது, பேச? - வாழ்க்கையில் நமக்குள்ள பிரச்சினைகளெல்லாம் காதலும் கல்யாணமும் தானே? இதோ இந்தக் காதல் காட்சியைப் பாருங்கள். நீங்கள் தான் கொடியை ஏந்திக்கொண்டு போகப் போகிறீர் களா? என்று கேட்கிறாள் அவள். "ஆம் நானே தான்' என்கிறான் அவன்