பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குப் பிடித்த புத்தகம் 31 'முடிவான தீர்மானம் அதுதானா?" 'ஆம், அது என் உரிமை' 'மறுபடியும் சிறைக்குப் போகவா" இதற்குப் பதில் இல்லை, அவனிடமிருந்து. 'நீங்கள் மட்டும் . . .' என்று ஆரம்பிக்கிறாள் அவள்; 'என்னது?" என்று குறுக்கிட்டுக் கேட்கிறான் அவன் 'ஒன்றுமில்லை; பொறுப்பை வேறு யாரிடமாவது விட்டு விடுங்களேன்? 'முடியாது. வேறுயாரிடமும் என்னால் விட முடியாது!' நான் உங்களை விரும்பிக் கேட்டால் கூடவா?' இந்த மாதிரி பேசுவது உன் வேலையில்லை; அப்படிப் பேச உனக்கு உரிமையும் கிடையாது' என்கிறான் அவன், அழுத்தம் திருத்தமாக. அப்போது அவனுடைய தொண்டை அடைபடுகிறது; தழுதழுத்த குரலில் அவன் சொல்கிறான் 'நீ எனக்கு மிகவும் பிரியமானவள், அதனால்தான் ... அதனால்தான் ... இந்த மாதிரியெல்லாம் நீ என்னிடம் பேசக் கூடாது என்கிறேன் நான்' இதில் காதல் இல்லையா? - இருக்கிறது. கல்யாணம் இல் லையா? - இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் தாங்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் காதலும், கல்யாணமும் மட்டும் அல்ல, வேறு எத்தனையோ இருக்கின்றன என்று இவர்கள் நினைக்கிறார் கள். அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வழிவகைகளையும் தேடுகிறார்கள் சித்திக்கிறார்கள் செயல்படுகிறார்கள்.