பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் பிறக்கிறது & & Upుuaుఖrd இறக்கும், இறப்பதெல்லாம் பிறக் கும். என்பது நம்மவர் நம்பிக்கை. 'இறப்பதெல்லாம் பிறக்கும்' என்பதைச் சிலர் ஒப்புக் கொள் ளாவிட்டாலும் 'பிறப்பதெல்லாம் இறக்கும்' என்பதை எல்லோ ரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், நாவல்கள் ... பிறப்பதெல்லாம் இறந்து விடுகின்றனவா?-இல்லை; இற வாத புகழுடைய நாவல்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அவற்றின் பட்டியலைக் கொடுத்து, இங்கே நான் எவ்வளவு தூரம் படித்தவன் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பாததால், மேலே தொடர்கிறேன். அத்தகைய நாவல்கள் எப்படிப் பிறக்கின்றன? எங்கிருந்து பிறக்கின்றன? சென்னை மூர் மார்க்கெட்டில் விற்கும் பழைய பிறமொழிப் பத்திரிகைகள், பழைய பிறமொழி நாவல்கள் ஆகியவற்றிலி ருந்தா? ஹிக்கின்பாதம்சில் விற்கும் புதிய ஆங்கிலப் பத்திரிகை கள், புதிய ஆங்கில நாவல்கள் ஆகியவற்றிலிருந்தா?-இல்லை, இல்லவே இல்லை. அதோ, எச்சில் சோற்றுக்கு நாயுடன் போராடிக் கொண்டிருக்கிறானே, அவனைக் கண்டு எவனுடைய நெஞ்சம் பதறுகிறதோ-அதோ, தோய்ந்த புடவையில் பாதியை தோட் டத்து வேலியின் மேல் போட்டுவிட்டு, இன்னொரு பாதியை இடையிலே சுற்றிக் கொண்டு நிற்கிறாளே, அவளைக் கண்டு எவனுடைய இதயம் குமுறுகிறதோ-அவனுடைய நெஞ்சத்திலி ருந்து, அவனுடைய இதயத்திலிருந்து அத்தகைய நாவல்கள் பிறக்கின்றன. அவ்வாறு பிறக்கும் நாவல்கள் காலத்தை மட்டு மல்ல, காலனையும் வெல்லும் சக்தி வாய்ந்தவையாகி விடுகின்றன.