பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் பிறக்கிறது 35 'எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்' என்பது, நான் எழுத ஆரம்பித்த போதே எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை இவையிரண்டும் இல்லா மல் எழுதுவதில்தான் என்ன பலன்? படிப்பதில்தான் என்ன பயன்? அநீதியையும் அக்கிரமத்தையும் அன்பென்றும் பண்பென்றும் பேசி எவன் மூடி மறைக்கிறானோ, “நல்லவனாக மட்டும் வாழ்ந் தால் போதாது; வல்லவனாகவும் வாழ வேண்டும்' என்ற நரித் தனத்தோடு எவன் தன்னை உலகமென்னும் அரங்கத்தில் நடிக்க மேக்-அப் போடாத நடிகனாக்கிக் கொண்டு விடுகிறானோ, அவ னால் மேற்கூரிய நாவல்களை எழுதமுடியாது! வாணிப நோக்கத்து டன் எழுத முயன்றாலும் வராது; வரவே வராது. நண்பர் அகிலன் சொன்னார். நன்றாகச் சொன்னார்-நதி மூலத்தையும் ரிஷிமூலத்தையும் ஆராயக்கூடாது என்பார்களே, அதுபோல் நாவலின் மூலத்தையும் ஆராயக்கூடாதென்றுஉண்மை முக்காலும் உண்மை-நம் தமிழ்நாட்டு நாவல்கண்ப் பொறுத்தவரை! ஏன் இந்த நிலை?-இதோ சில காட்சிகள் களம்: மூர் மார்க்கெட் காலம்: மாலை "எங்கே சார், இப்படி?" சும்மாத்தான்' 'சும்மா யாராவது செப்படி வித்தைக்காரர் களிடம் தாயத்து, தாது புஷ்டி மாத்திரை ஏதாவது வாங்க வந்நீர்களாக்கும்?" 'ஹி ஹறி அதெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே, ஒய்ந்த நேரத்திலே நான் பத்திரிகைகளுக்கு ஏதாவது, எழுதுவேன் என்று அதற்காக ஏதாவது 'மெட்டிரியல்ஸ் கிடைக் குமா என்று பார்க்க வந்தேன்'