பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விந்தன் கட்டுரைகள் 'மெட்டிரியல்ஸ் என்ன சார், வேண்டிக்கிடக்கிறது. தச்ச னுக்கு உளியும், கொட்டாப்புளியும் தேவைப்படுவதுபோல, கொத் தனுக்குக் கரண்டியும், மட்டப்பலகையும் தேவைப்படுவதுபோல, உமக்கு வேண்டியது காகிதமும் பேனாவும்தானே?" 'காகிதமும் பேனாவும் இருந்து விட்டால் போதுமா? எழுத ஏதாவது.....?' 'மூளை வேண்டும்! அவ்வளவுதானே?" 'நல்லவேளை, ஞாபகப்படுத்தினர்கள் அப்படி ஒன்று இருப் பதாக இப்பொழுதுதான் என்னுடைய ஞாபகத்துக்கு வருகிறது; நான் வரட்டுமா? 'என்ன அவ்வளவு அவசரம்? அப்படி என்னத்தை மறைத்து மறைத்து எடுத்துக்கொண்டு போகிறீர்?" 'அதுதான் சொன்னேனே.....' 'ஒ, மெட்டிரியல்லா? அதை மறைப்பானேன்? அந்தப் பாவி ஒரே ஒரு பிரதி அச்சிட்டு உமக்கு மட்டும் அனுப்பி வைத்தாலும் பரவாயில்லை; அவன்தான் லட்சக்கணக்கில் அச்சிட்டு உலகம் முழுதும் அனுப்பித் தொலைக்கிறானே' 'நன்றாய்ச் சொன்னீர்கள் எனக்கும் சில சமயம் அப்படித் தான் தோன்றுகிறது-என்ன செய்யலாம்? எவன் முந்திக் கொள் கிறானோ, அவனுக்கு அடிக்கிறது யோகம்! 'அடிக்கட்டும், அடிக்கட்டும்; சுய சிந்தனையாளர்களுக்கு உரிய கெளரவமும், தக்க பாதுகாப்பும் இந்த நாட்டில் கிடைக்கும் வரை உம்மைப் போன்றவர்களுக்கு யோகம் அடித்துக் கொண்டே இருக்கட்டும்!" இதோ, இன்னொரு காட்சி,