பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விந்தன் கட்டுரைகள் 'அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறேள்? இன்னும் கொஞ் சம் நாட்கள் போனா, அந்த மனுஷன் எழுதிய களைப்புத் தீர ஒரு கப் காப்பிக்குக் காசு கொடுத்தால் ப்ோதாதா என்று கூடக் கேட்பான் போலிருக்கிறது' 'பத்திரிகைக்காரர்கள் கூட விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இத்தனை பைசாவுக்கு இத்தனை அப்பளாம் என்று நாம் கணக்கிட்டு வாங்குவதுபோல், இத்தனை பக்கக் கதைக்கு இத்தனை ரூபாய்ன்னு கணக்கிட்டுக் கொடுக்கிறாளாமே?” 'அவர்கள் என்ன செய்வார்கள், பாவம் வாசகர்களும் பக்கம் கணக்குப் பார்த்துத்தானே எதையும் வாங்குகிறார்கள்!' இன்றைய இலக்கிய கர்த்தாக்கள், பத்திரிகைக்காரர்கள், பதிப் பாளர்கள், வாசகர்கள் ஆகியவர்களின் நிலை இதுவாக இருந்தால், இந்த நாட்டிலே நாவல் பிறக்கவா செய்யும் இறக்குமதிதானே ஆகும்? இந்த 'இறக்குமதி வியாபாரம்', 'ஏற்றுமதி வியாபாரமாக மாற வேண்டுமானால், நடுநிலையோடு எதையும் நாடும் நல்ல விமர்சகர்கள் நம்முடைய நாட்டுக்குத் தேவை நல்ல விமர்சகன் என்றால், அவனுக்கு நாலும் தெரிந்திருக்க வேண்டும், கதை எழுத வரவில்லை என்பதற்காக விமர்சனம் எழுத வந்துவிட்டவனாக இருக்கக்கூடாது: சில விமர்சகர்கள் இருக்கிறார்கள். இன்னார் எழுதிய இன்ன நாவலுக்குப் பிறகு, தமிழில் நல்ல நாவல் எதுவும் வரவில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு எழுதுவார்கள் நமக்கோ அப் பொழுதுதான் அப்படி ஒரு நாவல் வந்திருப்பதே தெரியும் தேடாத இடமெல்லாம் தேடி அதை வாங்கிப் படிப்போம்-பலன்?இரண்டு பக்கங்களுக்குமேல் படிக்க முடியாது, புத்தகத்தை மூடிக் கீழே வைத்துவிட்டு, அந்த விமர்சகரால் பெற்ற புத்தியைக் கொள்முதல் கணக்கில் எழுதிவைப்போம்-இல்லையா?