பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விந்தன் கட்டுரைகள் 'கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா?' என்று கேட்கிறாள் அவள். 'கொண்டு வா!' என்கிறான் அவன். வெந்நீர் வருகிறது, குடிக்கிறான். அதற்குமேல் ஆவலை அடக்கமுடியவில்லை, அவளால் 'என்ன கிடைத்தது?' என்று கேட்கிறாள், 'டி.பி !' என்கிறான் அவன் அப்போது அவள் விடுகிறாளே, பெருமூச்சு-அந்தப் பெரு மூச்சிலிருந்து என்னுடைய நாவல் பிறக்கிறது! அதோ, வேலைக்கு வருகிறாள் ஒரு குடியானவப் பெண், குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் அவளைக் கெடுக்கி றான் ஒரு மைனர், அந்த அவமானத்தைத் தாங்காமல் துக்கிலே தொங்குகிறாள். அவள்! செய்தி பரவுகிறது, பெற்ற தாய் துடிக்கிறாள். பேணிக் காத்த தந்தை பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் மைனர் வீட்டுக்குப் போகிறான், எல்லோரையும் தீர்த்துக் கட்டியபிறகு, எஞ்சி நிற்கிறது தொட்டிலிலே துங்கும் ஒரு குழந்தை, அந்தக் குழந்தையை நெருங்குகிறான், கத்தியை ஓங்குகிறான்-அது சிரிக்கிறது, தூக் கத்தில்தான்! கத்தி கீழே விழுகிறது. கொலைகாரன் குனிந்து அந்தக் குழந்தையை முத்தமிடுகிறான்-ஆம், கொலைகாரன்தான் அந்தக் குழந்தையை முத்தமிடுகிறான்! அப்போது அவன் முகத்தில் படர்ந்திருந்த இருள் மறைந்து ஒளி உதயமாகிறதே, அந்த ஒளியிலிருந்து என்னுடைய நாவல் பிறக்கிறது! இவ்வாறு பிறக்கும் நாவல்களெல்லாம் வளர்ந்து விடு கின்றனவா என்றால், அதுதான் இல்லை!