பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 43 எழுத்தாளர்கள் அவரைப் பற்றிப் பெருமையோடு பேசிக் கொள் வதை நான் கேட்டிருக்கிறேன். 'கடவுளால் சிருஷ்டிக்கப்படும் நிஜ ஜீவன்களாவது இன்று தோன்றுகின்றன, நாளை அழிந்து விடுகின்றன. ஆனால், வியாசரா லும் வால்மீகியாலும் சிருஷ்டிக்கப்பட்ட கற்பனை ஜீவன்களோ என்றும் அழியாதவை அத்தகைய சாகாவரம் பெற்ற கதாபாத்திரங் களைச் சிருஷ்டிசெய்து, இறவாத புகழ் பெற்ற வியாசரையும் வால்மீகியையும் போன்றவர்கள், ஆசிரியர் 'கல்கி அவர்களும், அவருடைய கதாபாத்திரங்களும்' என்பார் ஒருவர். 'வியாசரின் கதாநாயகியான திரெளபதிக்கும், வால்மீகியின் கதாநாயகியான சீதைக்கும், இளங்கோவின் கதாநாயகியான கண்ணகிக்கும் தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கும் கோயில் எழுந்தி ருப்பதுபோல, நாளை 'கல்கி' அவர்களின் கதாநாயகியான சிவகா மிக்கும் கோயில் எழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இராது' என்பார் இன்னொருவர் 'தமிழ்நாட்டில் இன்று மீறுமலர்ச்சி இலக்கியம் அடைந்திருக் கும் மகத்தான வளர்ச்சிக்கும், எத்தனையோ எழுத்தாளர்கள் தோன்றி விதம் விதமாக எழுதுவதற்கும்-ஏன், எழுத்தாளர் களுக்கே ஜீவநாடியான இலக்கிய ரசிகர்கள் 'மள மள'வென்று பெருகியதற்கும் கூடப் பெரிதும் காரணமாயிருந்தவர் ஆசிரியர் 'கல்கி அவர்கள்தான்!' என்று அடித்துச் சொல்வார் மற்றொருவர் 'அந்த நாளில் அகத்தியனால்தான் தமிழ்மொழி பெருமை யடைந்தது' என்பார்கள் சிலர் ஆனால் கம்பரோ அகத்தியனைப் பற்றிக் கூறும்போது, 'என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்' என்கிறார்-அதாவது, தமிழால்தான் அகத்தியன் பெருமையடைந் தானாம்-ஆனால் இந்த நாளிலோ, ஆசிரியர் 'கல்கி' அவர்களால் தான் தமிழ்மொழி பெருமையடைந்து வருகிறது" என்பார் மற்றும் ஒருவர் வியப்புடன்.