பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் அங்கதச் சிந்தனை யாளராகவும் திகழ்ந்து அரிய பல படைப்புகளை வழங்கிப் படைப்புலகில் தடம் பதித்து சென்றிருக்கும் எழுத்தாளர் திரு. விந்தன் அவர்கள் என்பதை அன்பர்கள் அறிவார்கள். நாற்பதுகளின் தொடக்கத்தில் 'கல்கி' இதழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து கண்திறக்குமா? மற்றும் பாலும் பாவையும் போன்ற நாவல்களையும் எழுதிப் புகழ் பெற்ற பெருமை அவருக்கு உண்டு. முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதிகள், வித்தன் கதைகள், ஏமாந்து தான் கொடுப்பீர்களா?, இதோ ஒரு மக்கள் பிரதிநிதி ஆகிய நூல்களில் அவர் ஏறத்தாழ முப்பது ஆண்டுக் காலத்தில் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றின் மூலமாகவும் அவர் மக்கள் எழுத்தாளர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. கதை சொல்லிச் செல்லும் பாங்கில் அங்கதமும், ஆரோக்கியமான நகைச்சுவையும் இணைந்து வெளிப்படுவதைக் காணலாம். கதைகளில் மட்டுமல்லாமல் உரைநடையில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் இதனைக் கண்டு மகிழலாம். எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் எத்தகு மனிதர்களைப் பற்றிய வரை படத்தைத் தர முயன்றாலும் அவர் தம்முடைய வாசகர்களை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே வைத்துக் கொண்டு எழுதினார். கரண்டும் வர்க்கங்களின் மீது அவருக்கு இருந்த கோபமும் வெறுப்பும் அவருடைய எழுத்துக்களில் வெளிப்படவே செய்கின்றது. இந்நூலில் அடங்கும் கட்டுரைகளில் பாரதி, பாரதிதாசன், கவிமணி, புதுமைப்பித்தன் ஆகியோரிடம் அவருக்கிருந்த பற்றினையும், பாம்பின் கால் பாம்பறியும் என்கிற முறையில் v