பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விந்தன் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய நேயர்கள் சந்திராவின் மனமார்ந்த அனுதாபங்களை இந்தச் சமயத்தில் ஏற்றுக் கொள்வார் களாக! மொத்தம் இருபத்தைந்து கதைகள் இந்தப் புத்தகத்தில் வெளி யாகியிருக்கின்றன யுத்தகாலக் காகிதச் சிக்கனத்தை முன்னிட்டு எல்லாக் கதைகளும் சின்னஞ்சிறிதாக எழுதப்பட்டவை. பெரும்பன் லும் ஏழைபடும் பாட்டை எடுத்துச் சொல்வதுதான் என்னுடைய கதைகளின் நோக்கமென்றாலும், அவற்றை எல்லோருமே அனுப விப்பார்கள் என்று நம்புவதற்கு இல்லையல்லவா? ஆகவே, கூடுமான வரை யாவருமே அனுபவிக்கும் முறையில் பலதரப் பட்ட கதைகளைக் கொண்டு இந்த 'முல்லைக் கொடியாள்' அலங்கரிக்கப்பட்டிருப்பதை நேயர்கள் உணர்ந்திருப்பார் களென்று நம்புகிறேன். ஆசிரியர் 'கல்கி' அவர்களுக்குப் பிறகு, என்னுடைய கதை களைப் பற்றி நான் இங்கு ஒன்றும் சொல்லிக் கொள்ள விரும்ப வில்லை. ஆனால், கையில் எடுத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்த பிறகுதான் கீழே வைக்குமாறு தூண்டும் சில புத்தகங்களைப் போல, இந்த 'முல்லைக் கொடியாள்' நேயர்களைத் தூண்டியிருக்க மாட்டாள் என்பது என்னுடைய நம்பிக்கை. ஏனெனில், ஸ்டாண் டுக்கு ஸ்டாண்டு நின்று, இறங்கும் பிரயாணிகளை இறக்கி ஏறும் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் கண்டக்டர்களைப் போல, இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நேயர்களும் கதைக்குக் கதை நின்று தள்ள வேண்டிய விஷயத்தைத் தள்ளி எடுத்துக் கொள்ள வேண் டிய விஷயத்தை எடுத்துக் கொண்டு மேலே செல்லவேண்டுமென் பது என்னுடைய விருப்பமாகும். அந்த விருப்பம் எங்வளவு தூரம் நிறைவேறியிருக்கிறதோ, அவ்வளவு தூரம் இந்தக் கதைகளை நான் எழுதியதன் நோக்கமும் நிறைவேறியதாகும். - முல்லைக்கொடியாள் , 1-8-1948 ஆவி ஆன் இ இ ஆல்