பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை பிகாத்தா எனக்குப் பிடிக்காத காரியம் ஒன்றைச் செய்துவிட்டார்கள். அந்தக் காரியம் இந்தப் புத்தகத்துக்கு 'விந்தன் கதைகள்' என்று பெயர் சூட்டியிருப்பதே! இல்லையென்றால் இதில் வெளியாகியுள்ள கதைகளை என்னு டைய கதைகள் இல்லையென்று யாராவது சொல்லி விடப் போகிறார்களா என்ன? 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற புத்தகம் முதன்முதல் வெளியானபோது, இதே கேள்வி பல எழுத்தாள நண்பர்களி டையே எழுந்தது. அப்போது அமரர் புதுமைப்பித்தன் சொன்னார். 'என்னைத் தவிர 'என் கதைகள்' என்று சொல்லிக் கொள்ள இங்கே வேறு யாருக்கு ஐயா, தைரியம் இருக்கிறது?' அவருக்கிருந்த அந்தத் தைரியம் அடியேனுக்கும் உண்டு, அதற்குச் சான்று என்னுடைய கதைகளில் சிலவும் பிற மொழி களில் இடம் பெறக் கூடிய தகுதியைப் பெற்றிருப்பதேயாகும். எனினும், ஏற்கெனவே வெளியான 'முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி' ஆகிய கதைத் தொகுதிகளைப் போல இந்தக் கதைத் தொகுதியும் ஏதாவது ஒரு கதையின் தலைப்பையே தன் தலைப்பாகக் கொண்டு வெளியாகியிருக்கலா மல்லவா? ஒரு வேளை, 'என் கதைகள்' என்ற தைரியம் எண்னத்தில் மட்டும் இருந்தால் போதாது. எழுத்திலும் இருக்க வேண்டும் போகட்டும்...... இலக்கிய உலகில, பொதுவாக ஒர் அபிப்பிராயம்-ான்ன அபிப்பிராயம் என்கிறீர்களா?-உங்களால் லேசான விவuங்க