பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விந்தன் கட்டுரைகள் ளைத்தான் தெரிந்து கொள்ள முடியுமாம் புரிந்து கொள்ள முடியுமாம்-உண்மையான வாழ்க்கையில் பட்டும் படாமல் ஒட்டி யும் ஒட்டாமலிருக்கும் 'செளஜன்யம் மிக்க கதை'களைத்தான் உங்களுக்குப் பிடிக்குமாம்; ருசிக்குமாம்! 'ராஜாமணி ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு நின்றான், சூடா மணி கேணியில் ஜலம் இறைத்துக் கொண்டிருந்தாள், ஒரு கணம் இருவர் பார்வையும் பட்டுத் தெறித்தன." என்பது போன்ற பீடிகையுடன் திடிரென்று ஏற்படும் திடீர்க் கல்யாணங்களும் நிறைந்த "லைட் மேட்டர்ஸ் ஸைத்தான் நீங்கள் சுவைப்பீர்களாம்; 'ஹெவி மேட்டர்ஸ்' என்றால் எடுப்பீர்களாம், ஒட்டம் அதற்கெல்லாம் காரணம் என்னவாம் தெரியுமா? உங்களுக்கு அவ்வளவு தூரம் 'இலக்கிய ஞானம்' கிடையாதாம். பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தெரியுமே தவிர, விஷயத்துக்கு முக்கி யத்துவம் கொடுக்கத் தெரியாதாம்! இப்படிச் சொல்கிறார்கள் ஐய்ா, அவர்கள் இப்படிச் சொல்கி றார்கள் என்னால் இதை நம்ப முடியவில்லை; உஹஅம்நம்பவே முடியவில்லை! அதற்காகச் சும்மா விட்டு விடுகிறார்களா? இல்லை, அனுதா பம் காட்டுகிறார்கள். அதை மறுத்தால், 'உங்களுக்குத் தெரியாது, லார் புதுமை மக்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் சமுதாயத் தைப் படம் பிடிக்கும், 'எக்ஸ்ரே கதை'களையும் அதன் கொடுமை களின் மேல் தீச்சரம் வீசும் புத்துலக இலக்கியங்களையும் அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்!' என்றெல்லாம் அவர்கள் உங்தன் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படியிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நீங்கள் அப்படி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலக்கியத்தில் நான் அப்படிப்பட்ட பாகுபாட்டையும் வகுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், பழைய பாசி பிடித்த வழுக்குப் பாதையை விட்டு விலகிப் புதிய பாதையிலே நான் நடக்க ஆரம்பித்ததும், என்னைத் தொடர்ந்து வருவதை நீங்கள் நிறுத்திக் கொண்டு விடவில்லை; அஞ்சி நடுங்கி ஓடி விடவும் இல்லை: