பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை 51 அதே முறையில் எதிர்கால மக்களான நிகழ்கால இளைஞர் களையும் உருவாக்கி, அவர்களிடம் இவர்களுக்கு எதிராக வளர்ந் துவரும் எதிர்ப்புச் சக்தியை எந்த விதத்திலாவது பறித்துவிடப் பார்க்கிறார்கள் இந்தப் பாதகர்கள் அதற்காகவே காமக் கலை'யை விஞ்ஞானக் கலை' என்று சொல்லும் அளவுக்கு இவர்களுடைய 'கலா ஞானம்' வளர்ந்திருக் றது. அதற்காகவே அநாகரீகத்தை நாகரீகம்' என்று சாதிக்கும் அளவுக்கு இவர்களுடைய 'பண்பு' உயர்ந்திருக்கிறது. அதற்கா கவே பொழுதைப் போக்க உதவாத கதையை எப்படிக் கதை என்று சொல்ல முடியும்?' என்று கேட்கும் அளவுக்கு இவர்களு டைய அசட்டுத் துணிச்சல் அதிகரித்திருக்கிறது. அன்பு ஆசையாகி, ஆசை அன்பானதற்குக் காரணம் இவர் களே; காதல் காமமாகி, காமம் காதலானதற்குக் காரணம் இவர் களே, பாவம் புண்ணியமாகி, புண்ணியம் பாவமானதற்குக் காரணம் இவர்களே, கலை விபசாரமாகி, விபசாரம் கலையான தற்குக் காரணம் இவர்களே, இலக்கியம் பித்தலாட்டமாகி, பித்த லாட்டம் இலக்கியமானதற்குக் காரணம் இவர்களே, நாகரீகம் அநாகரீகமாகி, அநாகரீகம் நாகரீகமானதற்குக் காரணம் இவர் களே, பணம் பகவானாகி, பகவான் பணமானதற்குக் காரணமும் இவர்களே! இதுவரை, பண்பு' என்னும் பட்டுத் திரைக்குப் பின்னால் ஒடி ஒளிந்து கொண்டிருந்த இந்தப் பக்காத் திருடர்கள் இப்போது 'தமிழ்' என்னும் தங்கத் திரைக்குப் பின்னால் ஒடி ஒளிகிறார்கள். 'தமிழ் என்றால் இனிமையல்லவா? அந்த இனிமையான தமிழில் இனிமையான கதைகள் எழுதினால் எவ்வளவு நன்றா யிருக்கும்' என்று இவர்கள் 'சுவாரஸ்யமாகச் சொல்லும்போது, 'பணம் என்றால் பாஷாணமல்லவா? அந்தப் பாஷாணத்தின் துணையால் பலருடைய ஆன்மாவை நீங்கள் கொல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்' என்று 'அசுவாரஸ்யமாகக் கொட்டாவி விடத் தோன்றுகிறது எனக்கு: