பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வித்தன் கட்டுரைகள் எது எப்படியிருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை இருப்பவன் வெளியே நல்லவனாயிருக்கிறான் உள்ளே பொல்லாதவனாயிருக் கிறான். இல்லாதவனோ, வெளியே பொல்லாதவனாயிருக்கிறான்; உள்ளே நல்லவனாயிருக்கிறான் அவனுக்கு வெளியே நல்லவனாயிருக்கச் சமூக நிலை இடங் கொடுக்கிறது; இவனுக்கு வெளியே நல்லவனாயிருக்கச் சமூக நிலை இடங்கொடுக்கவில்லை இந்த வித்தியாசம் ஒழிய வேண்டாமா? இருசாராரும் உள்ளும் புறமும் ஒன்றாக வாழ வேண்டாமா? இலக்கியம் அதற்கு உதவ வேண்டாமா? எனவே, இருப்பவனைப் பற்றி எழுதி அவனுடைய பணத் துக்கு உண்மை இரையாவதை விட, இல்லாதவனைப் பற்றி எழுதி அவனுடைய அன்புக்கு உண்மை இரையாவதே மேல் என நான் எண்ணுகிறேன்; அதனால் இனிக்கும் தமிழ் இன்று கசந்தாலும், கசக்கும் வாழ்க்கை என்றாவது ஒரு நாள் இனிக்கும் என நான் நம்புகிறேன். இத்தகைய குறிக்கோளுடன் எழுதும்போது, 'இல்லாதவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை உண்டாகும்படி எழுதவேண்டும்' என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதாவது, செத்தாலும் அவன் நம்பிக்கையுடன் சாக வேண்டும் என்பது அவர்களுடைய கட்சி. என்னுடைய கட்சியோ அதற்கு தேர் விரோதமானது. அதாவது, செத்துத் தொலைபவன் நம்பிக்கையோடுதான் செத்துத் தொலைய வேண்டும் என்பது என்ன விதி! நம்பிக்கையில்லாமல்தான் செத்துத் தொலையட்டுமே! உண்மை ஒன்று வாழ்ந்தால் போதாதா? உலகம் வாழ! -விந்தன் கதைகள் , 15-5-1958 岑米米岑岑