பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை அவர் எடுத்துச் சொல்லும் பற்றும், பாங்கும், நம் உள்ளத்தைத் தொடவே செய்கின்றன. தம் காலத்தவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்த சொத்தை சோடை படைப்புகளைப் பற்றி ஆங்காங்கே விமர்சனம் செய்வதோடு, தம்மடைய கண் திறக்குமா நாவல் அவர் ஒரு புனைபெயரில் எழுதியது பேராசிரியர் கல்கிக்குத் தெரிய வந்தபோது அவர்களுக்கிடையே இருந்த உரையாடலையும் உள்ளது உள்ளவாறே எடுத்துரைக்கின்றார் மக்கள் எழுத்தாளர் விந்தன். அவருடைய நால்களுக்கு அவர் எழுதிய முன்னரை - முடிவுரை போன்றவையும் சில வார இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. 1953ஆம் ஆண்டு தொடங்கி சில காலம் அவர் நடத்திய மனிதன் இதழில் அவர் எழுதிய இந்நாட்டு மன்னர்கள், இதோ ஒரு சுயமரியர்தைக்காரர் ஆகிய கட்டுரைத் தொடர்கள் இந்நூலைச் சிறப்பிக்கின்றன. பண்பு நல நோக்கு என்பது எத்தனை அழகாக அமைய முடியும் என்பதை இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. கதைகளில் அவர் படைத்துக் காட்டிய பாத்திரங்கள் உண்மையாய் நாடெங்கிலும் தோற்றம் அளிக்கும் இரத்தமும் சதையும் கொண்ட உண்மை மாந்தர்களே என்பதை அவர் இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். அவருடைய சமுதாயப் பார்வை மெய்மைகளைத் தேடுவதாகவும் அவற்றை உள்ளது உள்ளவாறே எழுத்தோவியங்களில் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. திரை உலகில் வாழப் பிறந்தவன், அன்பு, கூண்டுக்கினி போன்ற தம்முடைய படைப்புகளின் மூலம் அவர் இவ்வாறே தம்முடைய பாத்திரங்களை உயிர்ப்புள்ளவர்களாகப் படைத்துள்ளார் என்பதையும் இங்குக் குறிங்பிட வேண்டும். இந்நாலில் அடங்கும் இக்கட்டுரைகளை அரும் பாடுபட்டுத் திரட்டி வரிசைப் படுத்தி வழங்கி இருக்கும் இலக்கிய நண்பர் திரு. மு. பரமசிவம், விந்தன் அவர்களோடு ஐம்பதுகளிலிருந்து vi