பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்து! 'பாரதம் வாழி, பாரதம் வாழி! பசிகோவிந்தம் பாடப் பசிதந்த பாரதம் வாழி! தாய்த்தமிழ் வாழி, தாய்த்தமிழ் வாழி! தரித்திரத்தில் சரித்திரப் பெருமைபெற்ற தாய்த்தமிழ் வாழி' 1ொழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங் கடல் வாலி பம்; பசிமிக்க பாரதத்தில் வறுமை மிக்கோர் அதைக் கடப்பது கடினம் ஆயினும், வயலில் சிறுவாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டிவிடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது சுயாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும், சுகா னுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்க ளுடைய பரம்பரைச் சொத்துக்களைப் பராதீனப்படுத்தி, பசிக்குப் பலியாகும் கோடானு கோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்ததே இந்தப் 'பசி கோவிந்தம்' பாட்டு பசி வேறு பக்தி வேறு என்று பக்குவமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்தவரை லாபம் என்று கருதுவோர் அப்படிப்பட்ட சொற்றொடர்களை ஆங்காங்கே பிரயோகப் படுத்துகிறார்கள், அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கி விடக் கூடாது. எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும், தவறான பொருளை எடுத்துக்கொண்டு ததிங்கினத்தோம்' போடக் கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே: இரண்டல்ல. பசி முத்தினால் பக்திக்கு