பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலும் உலகிலே! உலகம் மட்டுமா சுழல்கிறது? மனிதனும் சுழல்கிறான்!-அவனுடைய வாழ்க்கை, நாகரிகம், அரசியல், இலக்கியம் எல்லாமே சுழல்கின்றன-அந்தச் சுழற்சியில்தான் எத்தனை மாறுதல்! ஒரு காலத்தில் ஏழை எளியவர்களைப் பற்றி, இல்லாதவர்களா யிருந்தாலும் பொல்லாதவர்களாக வாழ விரும்பாமல் நல்லவர்க ளாக வாழ விரும்பும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றிச் சிந்திப்பதும், எழுதுவதும் இலக்கிய உலகில் அவ்வளவாக எடுபடவில்லை. எனவே, எழுத்தாளர்கள் பலர் அவர்களைப் பற்றிச் சிந்திக்கவும் அஞ்சினார்கள், எழுதவும் அஞ்சினார்கள். அப்படியே ஒரிருவர் துணிந்து எழுதினாலும் 'என்ன கஷ்டம் வேண்டியிருக்கிறது சார் வாழ்க்கையில் தான் கஷ்டம் என்றால் இலக்கியத்திலுமா கஷ்டம்?" என்பார்கள் சிலர், 'இந்த ஏழை எளியவர்களின் பிரச்சினை இங்கு மட்டும் இல்லை, உலகம் பூராவிலுமே இருக்கிறது. அப்படி ஒரு பகுதி என்றும் எங்கும் எப்பொழுதும் இருக்கத்தான் இருக்கும்; யார் என்ன எழுதிக் கிழித்தாலும் அதை ஒன்றும் மாற்றிவிட முடியாது!' என்பார்கள் இன்னும் சிலர், 'அவன் என்ன செய்வான், பாவம் அவனே ஒரு தரித்திரம்; அந்தத் தரித்திரத்துக்குத் தரித்திரத் தைப் பற்றித்தானே எழுத வரும்?' என்பார்கள் வேறு சிலர். இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த 'கனவான்கள் இப் போது எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தால். காணோம்! அவர்களில் ஒருவரைக் கூட காணோம் ஆம், இலக்கிய உலகத்தி லும் அவர்கள் நிற்கவில்லை, இலக்கிய ரசிகர்களின் உள்ளங்களி லும் அவர்கள் நின்று நிலவவில்லை காரணம், வாழ்க்கையில் மட்டுமல்ல இலக்கியத்திலும் அவுர் கள் "ஹை" சர்க்கிளிலேயே "மூவ்" பண்ணிக் கொண்டிருப்புது தான்.