பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விந்தன் கட்டுரைகள் இயற்கையாயிருக்காது, எல்லாமே செயற்கையாயிருக்கும் - அப்படிப்பட்ட பேர்வழிகளிடம் இயற்கையான இலக்கியத்தை எதிர்பார்க்க முடியுமா? - முடியாதுதான்; ஆனால் அவர்கள் தலையிலும் நாலு அட்சதையை அள்ளிப்போட ஹை சர்க்கிள்' இருக்கும்போது, அதைப்பற்றி என்ன கவலை அவர்களுக்கு? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் - அப்படிப்பட்ட இலக்கி யக் கர்த்தாக்களுக்கு 'ஹை சர்க்கி'ளில் 'மூவ்" பண்ணுவது காரணமாக அரசியலில் பரிசு கிடைக்கலாம், பட்டம் கிடைக்க லாம், பணம் கிடைக்கலாம், பதவியும் கிடைக்கலாம் - மக்கள் உள்ளத்தில் இடம் மட்டும் கிடைக்காது - ஆம் அவர்கள் மண்ணாய்ப் போனாலும் கிடைக்காது: இதை உணர்ந்துதானோ என்னமோ, இப்போதெல்லாம் எழுத் தாளர்களில் பலர் ஏழை, எளியவர்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள், "ஹை சர்க்கி'ளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் இலக்கிய உலக்த்தில் ஒரளவு மதிப்பும் மரியாதையும் கூடப் பெறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வழி காட்டியாகயிருந்தவர்களில் அடி யேனும் ஒருவன் என்ற முறையில் இப்போது நான் பெருமைப் படுகிறேன்; அந்தப் பெருமையில் ஏற்பட்ட மன நிறைவுடன் நான் அவர்களை வரவேற்கிறேன், அவர்கள் வாழ, வளர, வாழ்த்தும் கூறுகிறேன். இதைத்தவிர இந்தப் புத்தகத்தில் வெளியாகியுள்ள கதை களைப் பற்றியோ, கருத்துக்களைப் பற்றியோ நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை சொன்னால் அது என்னையும் 'ஹை சர்க்கி'ளில் சேர்த்தாலும் சேர்த்துவிடலாம்! வேண்டாம், ஐயா பொய்யும் புரட்டும் இல்லாத சர்க்கி'ளே எனக்குப் போதும் - அவர்கள் வாழ்ந்தால் நானும் வாழ்கிறேன், அவர்கள் செத்தால் நானும் சாகிறேன்! 'ஏமாந்துதான் கொடுப்பீர்களா?”, 15-3-1963 命令命命命