பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விந்தன் கட்டுரைகள் இத்தனையும் இல்லாத ஒருவன் என்னதான் எழுதிக் கிழித்தா லும் நீங்கள் எங்கே அவனை எழுத்தாளன்' என்று மதிக்கிறீர்கள்? நீங்கள் எங்கே எழுத்தாளன்' என்று ஒப்புக்கொள்கிறீர்கள்? இந்த லட்சணத்தில் இது 'விளம்பர யுகமாக மட்டுமல்ல, 'கவர்ச்சி யுகமாகவும் இருந்து தொலைகிறது இந்த யுகத்தில் எழுத்துக் கவர்ச்சி'யைத் தவிர வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லாத நான், இருந்தாலும் அவற்றையெல்லாம் அன்றிலிருந்து இன்றுவரை அடியோடு வெறுத்து வந்திருக்கும் நான், இப்போதுதான் 'எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்' என்பதை உணர்கிறேன் உணர்ந்து, எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் வருந்துகிறேன். போகட்டும் நடந்ததை மறந்து நிகழ்ந்ததைக் கொஞ்சம் கவனிப்போமா?... என் வாழ்க்கையில் 1946-ம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்லவேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசின் முதன்முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன்முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான 'பாலும் பாவையும்' என்ற நாவல் மக்களின் பேராதர வைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது. அந்த நாவல் வெளியான காலம் 'சாகத்திய அகாடமி' என்ற ஒர் அமைப்பு தோன்றாத காலம். தோன்றியிருந்தால், 'பாலும் பாவையும் கூட அந்த நாளிலேயே அது அளிக்கும் பரிசைப் பெறும் தகுதியை முதன்முதலாகப் பெற்றிருக்கலாம். 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று சொல்லப்படுவது உண்மையானால், அதன் தீர்ப்பு மட்டும் வேறு விதமாகவா இருந்திருக்கப் போகிறது?