பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயம்வரத்துக்கு முன்னால்... 65 அது மட்டுமல்ல, 'திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்று சொல்லிவிட்டுப் போனான் பாரதி அந்தப் புலமையை என் கதைகளிலும் கண்ட தால்தானோ என்னவோ, அவற்றில் பல இந்திய, திராவிட மொழிக ளில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல முற்போக்கு நாடுகளில் பல அயல்நாட்டு மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் 'பாலும் பாவையும்' என்ற நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், பல சிறுகதைத் தொகுப்புகள், பல கட்டுரைத் திரட்டுகள் எல்லாம் வெளிவந்திருக்க வேண்டும். வரவில்லை - ஏன்? காரணம் வேறு யாருமல்ல; நானே! 'ஏதோ ஏதோ ஒரு மயக்கம்' என்கிறார்களே, சினிமாவில் வரும் காதலர்கள்-அப்படி ஒரு மயக்கம் அடியேனையும் அந்நா சளில் ஆட்கொண்டது. அதன் காரணமாகப் பல வகைகளில் எனக்குக் கற்பகத் தரு'வாக இருந்து வந்த 'கல்கி அலுவலகத்தை விட்டு, கல்கி அவர்கள் எச்சரித்தும் கேளாமல் விலகினேன். நடக்கக்கூடாத இது நடந்தது 1951-ம் ஆண்டில். அப்போது 'சுத்த சுயமரியாதை வீரனாக இருந்துவந்த தான், இப்போது சில இடங்களில், சில விஷயங்களில் 'அட்ஜஸ்ட்' செய்துகொண்டு போவதுபோலப் போயிருந்தால் நானும் மற்றவர்க ளைப்போல சினிமா உலகிலும் பிரகாசித்திருக்கலாம். அந்த 'புத்தி' அப்போது இல்லாததால் அதிலிருந்தும் விலகி, ‘சுதந்திர எழுத்தாளனாக இருந்து 'சுடர்' விடப் பார்த்தேன். நான் விட முயன்றாலும் என்னை விட விரும்பாத சுயமரியாதையோ அதற். கும் குறுக்கே நின்று தொலைந்தது.