பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தோழர் இளமைப்பித்தன் தம்முடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுத என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என் னவோ, நான் அறியேன். எனக்குத் தோன்றும் காரணம் இதுதான். என்னை அவருக்குத் தெரியாது, அவரை எனக்குத் தெரியாது! இதிலிருந்தே இந்நூலாசிரியர் மிகமிகப் பொல்லாதவரா யிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் ஏன் தெரியுமா?தெரிந்தவர்களுடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதைவிட, தெரியாதவர்களுடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது கடி னம். கடினம் மட்டுமல்ல, கடுமையான சோதனையும் امه ஆசிரியர் நமக்குத் தெரிந்தவராயிருந்துவிட்டால் விட்டது தொல்லை-அவருடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதற்குப் பதிலாக அவருக்கே முன்னுரை எழுதிவிடலாம். 'நிமிர்ந்த நன் னடை நேர்கொண்ட பார்வை, ‘வெடுக், வெடுக்' என்ற பேச்சு, 'களுக், களுக்' என்ற சிரிப்பு' என்றெல்லாம் அளந்துகொண்டே சென்று, 'புத்தகம் உங்கள் கையில் இருக்கிறது, இனிமேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்று கடைசியில் ஒரு முத்தாய்ப்புடன் முன்னுரையை முடித்துவிடலாம். ஆசிரியர் நமக் குத் தெரியாதவராயிருந்துவிட்டாலோ வந்தது தொல்லை-நாம் அவருக்கு முன்னுரை எழுத முடியாது அவருடைய கதைகளுக்குத் தான் முன்னுரை எழுதித் தீரவேண்டும். இந்த விஷயத்தை எப்ப டியோ தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் எமகாதகர் இளமைப் பித்தன். இல்லையென்றால் தமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது அவர் முன்னுரை எழுதச் சொல்லியிருக்கமாட்டாரா? &ుaurఅంబrd சென்னை 'மூர் மார்க்கெட்'டில்,பழைய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இருக்கும் கிராக்கியைப் பார்த்துவிட் ®ፅ όησυή: தமிழ்நாட்டில் சிறுகதை இலக்கியம் ஏகத்தாறாக வளர்ந்துவிட்டதென்று சொல்லிக்கொண்டிருக் கிறார் கள். அத்தகைய வளர்ச்சியை நான் இளமைப்பித்தனின் கதைகளில் காணவில்லை. அதாவது, அமெரிக்க ஆப்பிள் பழம் இந்திய