பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விந்தன் கட்டுரைகள் இவை தவிர, மற்ற கதைகளனைத்தும் வாழ்க்கையின் விசித்தி ரங்களைப் பல கோணங்களிலிருந்து நமக்கு எடுத்துக்காட்டுவன வாயிருக்கின்றன. அவற்றில் பகல் வேடதாரிகள் வருகிறார்கள், பத்திரகாளியின் சந்நிதியைப் படுக்கையறையாகக் கொள்ளும் பாதகர்கள் வருகிறார்கள் பைத்தியக்காரர்களும் நம் பரிதாபத்துக் குரியவர்களும்கூட வருகிறார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் நம்மைச் சிரிக்க வைப்பதோடு நின்றுவிடவில்லை சிந்திக்கவும் வைக்கிறார்கள். சிரியரின் சொந்த நடை எப்படியோ, எனக்குத் தெரி யாது. அவருடைய தமிழ்நடை அழகான நடை, மிடுக்கு, സrഖങ്ക്, மின்வெட்டு எல்லாம் பொருந்தியிருக்கும் நடை, மொத்தத்தில் எதை எழுதினாலும், எப்படி எழுதினாலும் சோபிக்கக்கூடிய நடை, அடிக்கடி சிரிக்க வைத்துக் கொண்டு செல்லும் சிறப்பு மிக்க நடை, அலுப்பில்லாமல் படித்து அனுபவிக்கக் கூடிய நடை. இது இயற்கை அவருக்கு அளித்திருக்கும் செல்வம் இந்தச் செல்வத்தின் துணைகொண்டு அவர் வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடிப்பா ரென்று நான் நம்புகிறேன் மற்றபடி, தோழர் இளமைப்பித்தன் அவரைப்போல் எழுது கிறார் என்றோ, இவரைப்போல் எழுதுகிறார் என்றோ நான் சொல்லத் தயாராயில்லை, ஏனெனில், இளமைப்பித்தன் இளமைப் பித்தனைப்போல் எழுதுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது! - நினைவுச் சின்னம் , 25-5-1951 邻 邻邻