பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடச் சுட குளு குளு கல்கி காரியாலயத்தில் நான் துணையாசிரியனாக இருந்த காலம், லட்சோப லட்சம் மக்கள் கூடியிருந்த கும்பகோ ணம் மகாமகக் காட்சியொன்றை அட்டைப் படத்தில் பிரசுரித்து, 'திரு. ஈ. வெ.ரா பெரியார் அவர்கள் என்ன பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து என்ன பயன்? மகாமகக் கூட்டத்தைப் பார்த்தீர்களா? என்ன கூட்டம், என்ன கூட்டம்' என்ற ரீதியில் ஓர் அரைப்பக்கம் விளக்கமும் எழுதியிருந்தோம். அதைப் பார்த்த திருச்சி கல்லூரி மாணவர் ஒருவர், பெரியார் அவர்களுக்காக வ்ரிந்து கட்டிக்கொண்டு, ஆசிரியர் கல்கி அவர்க ளைத் தாக்கு தாக்கு' என்று தாக்கி ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந் தார். அந்தக் கடிதத்தைப் படித்ததும் எங்களுக்கே என்னவோ போலிருக்கவே, ஆசிரியர் அவர்களிடம் அதைக் காட்ட வேண் டாம் என்று எண்ணிக் குப்பைக் கூடையில் போடப் போனோம். அப்போது எதிர்பாராத விதமாக எங்கள் அறைக்குள் நுழைந்த கல்கி அவர்கள், எங்களுடைய முகக் குறியிலிருந்தே விஷயத்தை ஒருவாறு புரிந்துகொண்டு, 'என்ன, என்ன விஷயம்' என்று கேட்டார்கள் நாங்கள் தயக்கத்துடன் விஷயத்தைச் சொல்லி, கடிதத்தையும் வேறு வழியின்றி எடுத்து அவரிடம் கொடுத்து விட்டோம் அதை வாங்கிப் படித்ததுதான் தாமதம்-நாங்கள் எதிர்பார்த்த படி ஆசிரியர் அவர்களுடைய முகத்தில் எள்ளும் வெடிக்க வில்லை, கொள்ளும் வெடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'ஆஹா என்னமா எழுதியிருக்கிறான், என்னமா எழுதியிருக்கி றான்' என்று ஒரே 'ஆஹாகாரத்'துடன், தமக்கு வழக்கமான 'என்னமா'வையும் போட்டுப் பாராட்டிவிட்டு, அந்த மாணவருக்கு உடனே தமது கைப்பட ஒரு கடிதமும் எழுதினார்கள் என்ன வென்று நினைக்கிறீர்கள்? 'இவ்வளவு சக்தி வாய்ந்த தமிழில் எழுதக்கூடிய,நீங்கள் ஏன் 'கல்கி காரியாலயத்தில் துணையாசிரிய ராகச் சேர்ந்து பணியாற்றக்கூடாது' என்று கேட்டுத்தான்! - குமுதம் , 10-12-1964 훈, 료 깊