பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தேன், சொல்கிறேன் t ருமணம் ஒரு கோட்டையைப் போன்றது அந்தக் கோட்டைக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக நினைக்கி றார்கள், உள்ளே இருப்பவர்கள் வெளியே வர நினைக்கிறார்கள்' என்று ஏதோ ஒரு பத்திரிகையில் எப்பொழுதோ படித்ததாக ஞாபகம் இது எழுத்துலகத்திற்கும் ஒரு வகையில் பொருந்தும் அந்த உலகத்துக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே போக நினைக்கிறார்கள் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர நினைக்கி றார்கள் ஆம், அன்று மாரீசன் மாயமானாகத் தோன்றிச் சீதாப்பிராட் டியை ஏமாற்றியதுபோல இன்று எழுத்தும் மாயமானாகத் தோன்றி எத்தனையோ இளைஞர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அத்த கைய இளைஞர்களில் பதின்மர் சேர்ந்து உருவாக்கியுள்ளதே இச் 'சரவிளக்கு' நல்லவேளையாக இவர்களில் யாரும் எழுத்தையே தொழிலா கக் கொண்டிருக்கவில்லை என்று நான் கேள்ளவிப்படுகிறேன் இது உண்மையானால் இவர்களுடைய முயற்சியை மற்றவர்க ளைப்போல நானும் வரவேற்கவும், வாழ்த்தவும் தயாராயிருக்கி றேன். இல்லையென்றால் அது என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் ‘யோசிக்க வேண்டிய விஷய'மாய்த் தான் இருக்கும் ஏனெனில் எழுத்தையே முழுக்க முழுக்க நம்பி இந்த இளைஞர்களில் யாரும் தங்கள் எதிர்கால வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை. அந்த எழுத்தாளருக்கு மாதம் பிறந்தால் அத்தனை ரூபாய் சம்பளம் கிடைக்கிறதாமே? இந்த எழுத்தாளருக்கு மாதந்தோறும் இத்தனை ரூபாய் வருமானம் வருகிறதாமே? என்றெல்லாம் பரவலா கப் பேசுவார்கள். கேட்க மலைப்பாயிருக்கும். ஆனால், உண்மை