பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பதற்கு முன்... தற்காலத் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக முற்போக்கு இலக்கியத்தில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டவர் மக்கள் எழுத்தாளர் விந்தன். அந்தச் சோதனை முயற்சிகள் குழந்தைகளுக்கு அவர் எழுதிய 'பாப்பா மலர்' கதைகளில் தொடங்கி பசி கோவிந்தம்', 'பாட்டில் பாரதம்' ஆகிய படைப்புகள் வரை அடங்கும். 'திறமையோடு மொழியின் துணையும் கொண்டு உலகப் புகழ்பெற்ற கீட்சாலும் ஷெல்லியாலும் கவிதைத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது. ஷேக்ஸ்பியராலும் இப்சனாலும் நாடகத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, விக்டர் ஹியூகோவாலும் டிக்கன்சாலும் நாவல் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, செகாவாலும் மாப்பசானாலும் சிறுகதைத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, வோட்ஹெளசாலும் ஓ ஹென்றியாலும் கட்டுரைத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது. ஆனால் ஆசிரியர் அவர்களோ எல்லாத் துறைகளிலுமே சிறந்து விளங்கினார், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமைக்கு ஆளாகி, அதே சமயத்தில் பலருடைய

  • *

பொறாமைக்கும் உள்ளானார்கள் பேராசிரியர் 'கல்கி' மறைந்தபோது 'உலகத்துக்கு ஒருவர்!' என்று 'மனிதன்' இதழில் மேற்கண்ட தலையங்கத்தை எழுதினார் விந்தன் іх