பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 1 இந்திய மக்கள் எல்லோருமே இந்திய மன்னர்களாக இருந்த காலம் என்றாவது நம் நாட்டில் இருந்ததா? இல்லை-சரித்திரத்தில் அப்படிப்பட்ட காட்சியே தென்பட வில்லை, இலக்கியத்தில் அத்தகைய குரலே எழுப்பப்படவில்லை. மக்கள் அடிமைகளாய்க் கோழைகளாய்க் கிடந்தபோது, சமூகத்தில் திடீரென்று தோன்றிய சில சமர்த்தர்கள் மட்டுமே மன்னர்களாக மாறினர். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற நீதி, அரசமாளிகையில் கட்டியங்கூறிக் கொண்டிருந்தது, மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே மேற்படி மாளிகை 'மகாமேரு'வாகக் காட்சி தந்துகொண்டிருந்தது. அதற்குள் கொலு விற்றிருந்த மணிம குடமோ மக்கள் தொடமுடியாத, தொட்டுப் பார்க்க முடியாத, எட்ட முடியாத, எட்டிப்பிடிக்க முடியாத, 'ஏன்?' என்ற கேள் விக்கே செவி மடுக்காத செங்கோலாக இருந்தது மன்னன் வேறு, மக்கள் வேறு - ஆள்வதற்கென்றே, ஆண்ட வனால், படைக்கப்பட்டவன் அவன், அவனுடைய ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் அடங்கி நடப்பதற்கென்றே ஆண்டவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் மக்கள் மனு நீதியும், மறையின் தீர்ப்பும் இதையே மக்களுக்கு உணர்த்தின இது நம் சரித்திரக் கதை - அந்தச் சரித்திரத்தின் மேல் படிந்த சரித்திரக் கறை. ஆனால் காலம் எப்படிப் பட்டது என்கிறீர்கள்? அது சரித்திரக் கதையை ஆக்கும்; அதன் மேல்படியும் சரித்திரக் கறையையும் போக்கும். அத்தகைய சரித்திரத்தின் துணையைக் கொண்டு, ஒரு நாள் 'வுெள்ளை மனிதர் இந்தியாவுக்குள் நுழைந்தனர். கறுப்பு மனிதரை அடிமை