பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 77 வருஷங்களாகியும் நாங்கள் இந்நாட்டு மன்னர்களாக இன்னும் ஆகவில்லையே?' என்ற ஏக்கத்துடன் மக்கள் அவரைப் பார்க்கின் றனர். பார்க்கின்றனர், பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்! அந்த முடிசூடா மன்னர்களில் ஒருவரான குமாஸ்தாவைத் தாங்கும் பெருமையைத்தான் இந்த இதழ் 'மனிதன்' அடைந்திருக் கிறான். 2 இந்த வரிசையில் இரண்டாவது மன்னராக இடம் பெற்றிருப்பவர் - இதோ, இந்த இதழ் அட்டையை அலங்கரிக் கும் - அலங்கார புருஷராக அல்ல - அனாதையாக, அகதியாக் காட்சி தரும் கைத்தறிக்காரர். இப்பொழுதான் இவர் அனாதை, அகதி, டிக்கெட் இல்லாப் பிரயாணி, நடைபாதைவாசி! இதற்கு முன் - அதாவது, பண்டைக் காலத்தில் இவர் மன்னர் மட்டுமா? - இல்லை, மன்னர்களும் கண்டு மயங்கக்கூடிய மகா வல்லபராக இருந்தார். அப்பொழுதெல்லாம் இவருக்கு மாட மாளிகை இல்லாவிட்டா லும் மண் குடிசை இருந்தது. மணிமகுடம் இல்லாவிட்டாலும் முண்டாக கட்டிக்கொள்ள ஒரு முழம் துண்டாவது இருந்தது. செங்கோல் இல்லாவிட்டாலும் பாவு தட்டும் கோலாவது இருந்தது. நிலவின் ஒளி, நீரின் அலை - அடடா இவர் அன்று நெய்த ஆடையின் நேர்த்தியை என்னென்பது? அத்தகைய திறமையை இவர் எங்குப் பெற்றார், எங்கிருந்து கற்றார் என்று தெரியாமல் கவிஞர்கள் உவமைகளைத் தேடினார்கள், அவர்கள் என்ன, ஆனானப்பட்ட 'லங்காஷயர் ஆலைகளே நமது கைத்தறியாளரின் திறமையைக் கண்டு திகைத்தன என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன்!