பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விந்தன் கட்டுரைகள் ஆசிரியர்களின் சேவை மட்டும் மறையவில்லை. மடியவில்லை. அதற்குப் பதிலாக மலர்ந்து விரிந்து, மணம் பரப்பிக் கொண்டே இருக்கிறது. காய்ந்த செடியில் துளிர்க்கும் அரும்பு போல வறுமையில் உழலும் ஆரம்ப ஆசிரியர்களின் உள்ளத்திலே முகிழ்த்து முறுவ லிக்கும் சேவா உணர்ச்சி 'சமூகச் செல்வங்க'ளுக்குத் தக்க சமயத்தில் பயன்படுகிறது எதிர்கால மன்னர்களாகிய சிறார்களின் நெஞ்சிலே, உயர்ந்த லட்சியத்தின் வரிவடிவங்களை வரையும் அவர்களுடைய பெருமை மகத்தானது. ஆனால், அவர்கள் அடை யும் சிறுமையோ? அப்பப்பா சொல்லக் கூசுகிறது! 'சம்பளம்' என்ற ஒன்று இவர்களுக்கும் கிடைக்காமற் போக வில்லை; அந்தப் பொருளால் இவர்கள் கணந்தோறும் செத்துப் பிறக்காமலும் இருக்கவில்லை - ஆம், இவர்களுடைய சிரிப் பிலே ஏன் அந்த வேதனை? வீட்டில் ஏற்றும் விளக்கொளியிலே ஏன் அந்த இருட்டு? குழந்தையின் மழலைமொழியிலே ஏன் அந்தச் சோகம் குடும்பத்தின் இன்ப நினைவிலே ஏன் அந்தத் துன்பச் சாயல்? வாழ்க்கைச் சோலையிலே ரன் அந்த வறுமைப் புயல்? இந்த நிலையிலே உலர்ந்த நெஞ்சும் ஒட்டிய முகமுமாக இருக்கும் இவர், 'சம்பள உயர்வு கேட்பது தப்பு, வயிறார உண்ண உணவு கேட்பது தப்பு வாழ்க்கைக்கு வேண்டிய சாதாரன வசதி கேட்பது கூடத் தப்பு - ஏன், இவர் வாழ நினைப்பதே தப்பு' என்று சொல்வதைப் போல் எல்லாம் நடக்கிறது நம் அரசாங்கத் திலே! இத்தகைய 'மன்ன'ரின் சம்பளத்தைப் பற்றிச் சென்ற வாரத் தில் நிபுணர்கள் பலர் கூடிக் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த முடிவு, 'இந்தியாவில் ஆசிரியர்களுக் குக் கொடுக்கப்படும் சம்பளம் ரொம்ப மட்டம், சகிக்க முடியாத மோசம்' என்பதுதான். 鶯 朝 蔓