பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 8 I 4 ԼԳ-օմւմ எலேன்' ஆரம்பமாகி விட்டது. இறந்த கால மகாராஜாக்களின் பணத்தோடு, 'எதிர்காலப் பிச்சைக்காரர்'களின் பணத்தையும் பறித்துக்கொண்டு சென்னை மாநகரையடுத்த கிண் டியிலே குதிரைகள் வாயு வேகம் மனோ வேகமாக ஓடிக்கொண்டி ருக்கின்றன அவை சிந்தும் ஒரு சில சல்லிக் காசுகளைப் பொறுக்கி எடுக்கும் 'புனிதமான தொண்'டில் ஈடுபட்டிருக்கும் 1954 மாடல் முற்போக்குப் பத்திரிகைகள் சில' அவற்றைப் பற்றிய செய்தி களைப் பத்தி, பத்தியாக வெளியிட்டுப் படித்தவர்களோடு பாமரர் களையும் பைத்தியக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் பொழுது போக்குக்காகத்தான், எல்லாம் வெறும் விளையாட்டுக்காகத்தான்! இனி அதையடுத்துச் சங்கீதக் கச்சேரிகள் ஆரம்பமாகும் - வயிற்றுக் கவலை இல்லாதவர்களின் செவிக் கவலை தீரும், பரத நாட்டியக் கலையரங்குகள் நிர்மாணிக்கப்படும் - பல்லில்லாத கிழவர்கள்கூடப் பாட்டிமாரான குமாரிகளின் அங்க அசைவுகளைக் கண்டு, 'இளிக்கக்கூடப் பல் இல்லையே!' என ஏங்குவார்கள். எல்லாம் பொழுதுபோக்குக்காகத்தான் எல்லாம் வெறும் விளையாட்டுக்காகத்தான்! இவை மட்டுமா? - இருப்பவனின் பனப் போட்டிக்காக நடக்கும் இல்லாதவனின் ரேக்ளாப் போட்டி, சைக்கிள் போட்டி கன்ெலாம் பார்க்கப் பார்க்க வேடிக்கையாயிருக்கும் பாமரர்க ளுக்கு வேதனையாயிருக்கும் பகுத்தறிவாளர்களுக்கு.