பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 83 கள், ஐயோ, அழவேண்டிய நேரத்தில் அவர்கள் சிரிக்கிறார்களே! - அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அறியாமையைக் காட்டுகி றார்களே - அவர்கள் மக்களா? மனிதர்களா? - நம்மைப் பொறுத்த வரை சந்தேகமாய்த்தான் இருக்கிறது. இந்தக் கொடுமை எப்போது சாயும்? இந்தக் குரூரம் எப்போது மாயும்? - பதில் அளிக்க வேண்டியவர்கள் நீங்கள்தான்! 奪 會 囊 5 நம் பழம் பெரும் பாரத நாட்டின் அருமை பெருமைக ளைப் பற்றி அன்றும் இன்றும் பல கவிஞர்கள் பாடினர்கள்; பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில நாம் ஒப்புக்கொள்ள முடியாதவை; அழுத்தந்திருத்தமாக மறுக்கக் கூடியவை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம் அனைவரும் உடனே ஒப்புக்கொள்ளக்கூடியவர்களாயும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்க முடியாதவர்களாயும் இருக்கிறோம். அதுதான் தொழிலாளரின் தோற்றம்! உழவன் என்றால் இப்படித்தான் இருப்பான் கொல்லன் என்றால் இப்படித்தான் இருப்பான், குயவன் என்றால் இப்படித் தான் இருப்பான், கொத்தன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று பார்க்கும்போதே இனங் கண்டுகொள்ளும் 'பெருமை” நமது நாட்டின் தனிப்பெருமை!’ மற்ற நாடுகளோ இன்றுவரை அந்தப் 'பெருமை'க்கு உள்ளாக வில்லை. அங்கெல்லாம் தொழிலில்தான் வித்தியாசம், தோற்றத்தில் வித்தியாசம் கிடையாது - என்ன சிறுமை, என்ன சிறுமை - எதற்கும் கொடுத்து வைக்க வேண்டும், பாருங்கள்!