பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறவினர் எதற்கு?

109

கம்பலையுமுடன் அவர்களிடம் என் கருத்தைத் தெரிவித்தேன். ஆனால் நடந்தது என்ன?

என்னுடன் பிறந்து வளர்ந்த என் தங்கை, பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தாள். ரங்காவின் தாயுடன் பிறந்து வளர்ந்த என் மைத்துனன் நான் கல்யாணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் “இப்பொழுது அதற்கென்ன அவசரம்?” என்று எரிந்து விழுந்து என் வாயை அடக்கினான். ஆனால் அதே சமயத்தில் அவன் தன் பிள்ளைக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவர்கள் வாயைப் பார்ப்பதும், அவர்கள் வானத்தைப் பார்ப்பதுமாக எத்தனையோ நாட்கள் கழிந்து விட்டன. என்னுடைய எண்ணம் மட்டும் ஈடேறவில்லை.

***

ஒரு நாள் இரவு பத்துமணி இருக்கும். மழை ‘சோ’ வென்று பெய்து கொண்டிருந்தது. தூக்கம் பிடிக்காமல் நான் வீட்டு வாசலில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அழுக்கடைந்த ஜிப்பாவும், பைஜாமாவும், அணிந்த ஒரு வாலிபன் மழைக்காக வராந்தாவில் ஒதுங்க வந்தான். அவன் முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்த தாடியும் மீசையும் பார்ப்பதற்கு விகாரமாயிருந்தன. ஆனால் கண்களில் மட்டும் தெய்வீக அமைதி குடி கொண்டிருந்தது.

“நீ யார், தம்பி? எங்கே போக வேண்டும்?” என்று நான் விசாரித்தேன்.

“நானா கைதி ‘எங்கே போகவேண்டும்!’ என்று எனக்கே தெரியாது!” என்றான் அவன்.

என் மனம் ‘திக்’கென்றது. “கைதியா!” என்று பரபரப்புடன் கேட்டு விட்டுத் தெருவைப் பார்த்தேன். யாராவது போலீஸ்காரர்கள் அவனைப் பின் தொடர்ந்து வருகிறார்களா என்றுதான்!

அதற்குள் என் குறிப்பை ஒருவாறு உணர்ந்து கொண்ட அந்த வாலிபன், “ஐயா! நான் திருட்டுக் கைதியல்ல; கொலை செய்த கைதியல்ல; சிறையிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட கைதியல்ல!” என்றான்.

அப்புறம் தான் எனக்கு விஷயம் புரிந்து விட்டது. ஆனானப்பட்ட ஹிட்லராலும், முஸோலினியாலும், டோஜாவாலும்