பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வி.ஜி. என்னும் பெயரில் கல்கி இதழில் பாப்பா மலர் பகுதியில் கதைகள் எழுத ஆரம்பித்தார்.

1943 -பேராசிரியர் கல்கி அவர்களால் ‘விந்தன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ‘கல்கி’ இதழின் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1944- பாட்டனாரும், தந்தையும் இருதாரங்களை மணந்தது போலவே விந்தனும் சரஸ்வதி அம்மையாரை 13-7-44 அன்று மணந்தார்.

1946-விந்தன் எழுதிய ‘முல்லைக் கொடியாள்’ என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் முதற்பரிசு வழங்கிப் பாராட்டியது.

1948- முற்போக்காளர் முருகு சுப்பிரமணியம் நடத்திய ‘பொன்னி’ இதழில் கண்திறக்குமா? என்ற தொடர்கதையை - முதல் நாவலை எழுதினார்

1950- கண் திறக்குமா? என்ற தொடர்கதையை எழுதி பலரின் பாராட்டுக்கும் பாதிப்புக்கும் ஆளான விந்தன் பேராசிரியர் கல்கியின் விருப்பத்துக்கு ஏற்ப கல்கி இதழில் ‘பாலும் பாவையும்’ என்ற தொடர்கதையை எழுதினார்.

1951- கல்கி இதழை விட்டு விலகி ஏ.வி.எம் கதை இலாகாவில் சேர்ந்தார். ‘ஒரே உரிமை’ என்னும் சிறுகதை தொகுப்பு டாக்டர் மு.வ. முன்னுரையுடன் வெளிவந்தது.

1953- ‘சமுதாய விரோதி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு கி. சந்திரசேகரன் முன்னுரையுடன் வெளிவந்தது. அதே ஆண்டில் விந்தன் வசனம் எழுதிய ‘வாழப் பிறந்தவள்’ என்ற திரைப்படமும் வெளிவந்தது.

1954- ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் ‘மனிதன்’ என்னும் மாத இதழை வெளியிட்டார். விலை நாலணா. இவ்விதழ் பத்து இதழ்களே வெளி வந்தன.

1957- ‘அமுதசுரபி’ மாத இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்னும் பெயரில் தொடர்கதை எழுதினார் அக்கதை தன்னுடைய ‘சிநேகிதி’ நாவலலைத் தழுவியிருப்பதாக- விமர்சனம் செய்வதாக எழுத்தாளர் அகிலன் விந்தன் பேரில் வழக்குத் தொடுத்தார்.

1959- புத்தகப் பூங்கா என்ற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்து தோழர் ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்புதான் ஜெயகாந்தனை ஆனந்த விகடனுக்கு அடையாளம் காட்டியது

1960- ‘அமுதசுரபி’ இதழில் ‘மனிதன் மாறவில்லை’ என்னும் தொடர்கதையை எழுதினார் இதே ஆண்டில் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்க எண்ணி மல்லிகா புரொடக்ஷன் என்னும் பெயரில் திரைப்படக் கம்பெனியைத் துவக்கினார்

1961- ‘கனவிலே வந்த கன்னி’ என்னும் தலைப்பில் ராணி வார இதழில் தொடர்கதை எழுதினார் இக்கதையே பின்னால் ‘காதலும் கல்யாணமும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தபோது க.நா சுப்பிரமணியம் முன்னுரை எழுதினார்.

1962- ‘முன்னணி’ மாத இதழில் ஏமாந்துதான் கொடுப்பீர்களா? என்று ஒரு சிறுகதையை விந்தன் எழுதிய போது இக்கதையைக் கவிஞர்