பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

விந்தன் கதைகள்

"உனக்குத் தெரியாதா? - அதுதானே பார்த்தேன்; தெரிஞ்சிருந்தாத்தான் நீயும் அவனோடு துத்தா போட்டுகிட்டு வரப் போயிருப்பயே?" என்றான் இசக்கிமுத்து.

"அவனைப் போல் என்னையும் மானங்கெட்ட பயலுன்னா நினைச்சுட்டே? நெயாயமாப் பார்க்கப் போனா அந்தக் காந்திராசா பேச்சைக்கேட்டு நாமே கள் குடிப்பதை நிறுத்தி இருக்கணும். அதுதான் இல்லேன்னா, காலையும் கையையும் பிடிச்சுக்கிட்டுக் குழந்தைக்கு மருந்து ஊத்தறாங்களே, அந்த மாதிரிக் காங்கிரசு ராசாங்கம் கள்ளுக்கடையை எடுத்த அப்புறமாவது கள் குடிப்பதை நிறுத்தியிருக்கணும். ரெண்டுமில்லாம திருட்டுத்தனமாக குடிக்கிறதுன்னா அது அக்குறும்பு இல்லே?”

"அக்குறும்புதான்; ஆனா அதைக் கேட்க யாரு இருக்காங்க?”

"ஏன் இல்லே? போலீசுஜவானுங்க இல்லையா? அவங்ககிட்ட மாட்டிக்கிட்டா இல்லே சங்கதி தெரியும்?”

"ஊம்....அவனுங்க இல்லே அந்த அக்குறும்புக்காரனுங்கிட்ட மாட்டிகிட்டு முழிச்சானுங்க!"

"என்ன....!"

‘ஆமா அண்ணங்கிறேன்! நேத்து மேலத் தெருவிலே ரெண்டு பயலுங்க குடிச்சுப்பிட்டு வந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானுங்க. அந்தப் பக்கமாப் போன ரெண்டு ஜவானுங்க அவனுங்களைப் பிடிச்சிக்கிட்டுப் போக ஒட்டமா ஓடி வந்தாங்க - அவ்வளவுதான்; அண்ணே! அந்தத் தெருவாரெல்லாம் ஒண்ணாக் கூடிக்கிட்டு அவனுங்களை அடி அடி ன்னு அடிச்சுப் போட்டுட்டாங்க....!"

"அப்பாலே... ?”

"இன்ச்சுபெட்டரு, அவங்க இவங்க எல்லாம் வந்து அந்தத் தெருவிலே யிருந்த முரட்டுப் பயல்களையெல்லாம் பிடிச்சுக்கிட்டுப் போனாங்க!"

"என்ன புத்தி கெட்ட பயலுங்க பார் அண்ணே. இவனுங்க பெண்டாட்டி பிள்ளை பிழைக்கத்தானே கள் குடிக்க வேணாம்னு சொல்றாங்க அதைக் கேட்டு ஒழுங்கா இல்லாம திருட்டுத்தனமா சாராயம் காய்ச்சறதும், கள் குடிக்கிறதும் என்ன வேலைங்கிறேன்? -