பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

விந்தன் கதைகள்

பேச்சிமுத்து தலையைச் சொறிந்துகொண்டே, "குரலைப் பார்த்தா நல்லமுத்து அண்ணனாட்டம் இருக்குது; ஆனா பார்க்கிற பார்வையைப் பார்த்தா போலீசு ஜவானாட்டம் இருக்குதே" என்று முணுமுணுத்தன.

"பயப்படாதே, நல்லமுத்து அண்ணன்தான்" என்றான் நல்லமுத்து.

"நல்லமுத்து அண்ணே நல்ல சமயத்திலே வந்து சேர்ந்தேப்பா - இதோ உன் பக்கத்திலே நிற்கிறாரே, இவர் யாரு?”

"இசக்கிமுத்து அண்ணன்"

"அப்படியா சங்கதி? நீங்க போலீசு ஜவானுங்களாக்கும்னு நெனைச்சி நான் பயந்தே போயிட்டேன்" என்றான் பேச்சிமுத்து.

"அப்படிப் பயந்துகிட்டு இந்த ஜோலிக்கு ஏன் போகணும், தம்பி?"

"என்னமோ, போனேன் மனசு கேக்குதா?" "ஆமாம்; ஆறு மாசம் உள்ளே தள்ளி வச்சாத்தானே மனசு கேக்கும்!"

"அப்படின்னா நீ என்னைப் போலீசுஜவானுங்கக்கிட்ட காட்டிக் கொடுத்துடப் போறியா?”

"பின்னே, அப்போத்தானே உனக்குப் புத்திவரும்?"

"அண்ணே, அண்ணே உன் காலிலே விழுந்து கேட்டுக்கிறேன். அண்ணா! - நீ என்னை வேணும்னா காட்டிக் கொடுத்துடு; அந்த ‘கபார்தார்' ஐயாவை மட்டும் காட்டிக் கொடுத்திடாதே"

"கொடுத்தா என்ன, தம்பி?"

"ஐயையோ என்தலை போயிடுமே அவரு கொடுக்கும்போதே சொல்லித் தானே கொடுக்கிறாரு அடே, உன் காசு எனக்கு பெரிசில்லே! என்னமோ கஷ்டப்பட்டுக் களைச்சுப் போறியேன்னு கள்ளத்தனமா இந்தச் சாராயத்தை காய்ச்சி கொடுக்கிறேன். குடிச்சிட்டுப் போய்ப் பேசாமக் குடிசையிலே படுத்துக்கிடக்கணும். வழியிலே தப்புத் தண்டாவுக்குப் போய்ப் போலீசு ஜவானுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டியோ, என் பேரை வெளியிலே சொல்லக்கூடாது. அடியோ, உதையோ, குத்தோ, ஜெயிலோ எதுவாயிருந்தாலும் நீதான் அனுபவிச்சித் தீரணும். அதிலே என்னையும் மாட்டிவிட்டியோ, உன் - -