பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

 விந்தன் கதைகள்

சொன்னேனா, இல்லையா? . வீணா என்னுடைய கோவத்துக்கு ஆளாகாதே, போ!"

"இந்த அக்கிரமத்தை நீங்கள் நிறுத்தாதவரை என் உயிரே போவதாயிருந்தாலும் சரி, நான் இந்த இடத்தை விட்டுப் போகவே மாட்டேன்!"

"அட, பெரிய சீமான் இவரு! - சீ, போடா நாயே! இந்தக் ‘கபர்தார் கனகராஜ்' கிட்டவா வந்து நீ கணக்குப் பண்றே, கணக்கு? இந்த இடத்தைவிட்டு மரியாதையாய்ப் போறியா? - இல்லே, நானே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டுமா?" என்று அவர் சிம்மநாதம் செய்தார்.

அவ்வளவுதான்; மகன் ஆட்டுக்குட்டியாக அடங்கி நின்ற இடத்திலேயே நின்றான்.

கபர்தார் கனகராஜ் கண்கள் 'ஜிவ்' வென்று சிவக்க, மீசை முறுக்குக்கலைந்து துடிக்க, அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

அப்பொழுதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை!

அடுத்த நிமிஷம் ‘பளிர் பளீர்’ என்று இரண்டு அறைகள் அவனுடைய கன்னத்தில் மின்னலிட்டன.

புஷ்பராஜ் அசந்துபோனான்!

அதற்குப் பிறகு அவன் அங்கே நிற்கவில்லை. கன்னத்தைத் தடவிக் கொண்டே தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

திருட்டுச் சாராயவியாபாரம் எந்தவிதமான இடைஞ்சலுமின்றி வழக்கம் போல் இரவு பத்து மணிவரை தொடர்ந்து நடந்து முடிந்தது.

** *

பத்து மணிக்குப் பிறகு புழக்கடை அறையை பூட்டிக் கொண்டு வந்த கபர்தார் கனகராஜ் நேரே புஷ்பராஜின் அறைக்குள் ஆவேசத்துடன் நுழைந்தார்.

அவருடைய ஆவேசத்தைக் கண்டதும் புஷ்பராஜ் தன்னையறியாமலே எழுந்து நின்றான்.

"அடேய், எனக்கு முன்னமேயே தெரியும் நீ இப்படி ஏதாச்சும் ‘தத்துப்பித்து'ன்னு உளறுவேன்னு! - பேசாம நான் சொல்றதைக்