பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

விந்தன் கதைகள்

"...........காதலிக்கவில்லையா?”

"ஊஹஅம்; எங்க ஊரிலே அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்!" என்று சொல்லிவிட்டு, அவள் வெட்கத்தால் தலையைக் கீழே கவிழ்த்து கொண்டாள்.

எனக்கு எப்படி யிருக்கும்?..... என் மனம் அமைதியை அடியோடு இழந்து விட்டது. அவசர அவசரமாக அவளுக்காக வாங்கி வைத்திருந்த முல்லை மொட்டுக்களையெல்லாம் அருகேயிருந்த ஆலமரத்தடிப் பிள்ளையாரின்தலையில் கொட்டிவிட்டு, தங்கையின் வீட்டைக்கூட மறந்து விடுவிடு வென்று வந்த வழியே திரும்பினேன். அவள், "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

நான் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. பட்டணத்தைப் பற்றியும், பட்டணத்துப் பயல்களைப் பற்றியும் கொஞ்சங்கூடத் தெரியாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை நான் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?