பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் ஏகாம்பரம்

255

ஏகாம்பரம் இப்படி யென்றால், எங்கள் வட்டாரத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அதன் பெருமைகளைப் பற்றிச் சொல்லப் போனால் அவை எண்ணில் அடங்கா; எழுத்தில் அடங்கா; ஏட்டிலும் அடங்கா; மலேரியா, வைசூரியா, காலராவா - எது வந்தாலும் அதற்கு முதல் வரவேற்பு அளிக்கும் பெருமை எங்கள் வட்டாரத்தையே சாரும். மழைக் காலங்களிலோ சொல்ல வேண்டியதில்லை, எங்கள் தெருக்களைப் பார்க்க இரண்டு கண்களும் இல்லாமலிருக்கக் கூடாதா என்று தோன்றும். இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்து விட்டால் ஒரே வெள்ளக்காடுதான். அந்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டு சென்றால், “இதற்குத்தானே இரண்டு வருஷங்களாக எனக்கு உங்கள் வோட்டைப் போடுங்கள் என்று நான் அடித்துக் கொள்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே ஏகாம்பரம் எதிரே வந்து நிற்பார்.

இப்படி அவர் என்னைக் கண்டால் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை; எங்கள் வட்டாரவாசிகளில் யாரைக் கண்டாலும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தத் தொந்தரவைத்தாங்க முடியாமல்தானோ என்னவோ மூன்றாவது வருஷம் அவர் தேர்தலுக்கு நின்றபோது எங்கள் வட்டாரவாசிகள் அவரையே தங்கள் கெளன்ஸிலராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்

அத்துடன் அவருடைய கவலை தீர்ந்தது! அதற்கு பிறகு அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியவில்லை. அதற்குள் வோட்டுச் சேகரிக்கும் வித்தையில் அவர் கைதேர்ந்தவராகிவிட்டார். அதன் பயனாக எங்கள் வட்டார வாசிகளின் ஆதரவு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவரே வருஷா வருஷம் கெளன்ஸிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்

★ ★ ★

பத்து வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் பழைய நண்பர்களைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்பதற்காக நான் சென்னைக்குத் திரும்பினேன். எங்கள் வட்டாரத்தில் எத்தனையோ மாறுதல்களை நான் எதிர்பார்த்து வந்தேன். ஆனாலும் இங்கே வந்ததும் எந்த விதமான மாறுதலையும் காணாமல் திகைத்துப் போனேன். சர்க்கார் புராதனசின்னங்களைப் பாதுகாப்பது போல் திருவாளர் ஏகாம்பரமும் எங்கள் வட்டாரத்தின் பழம் பெருமைகளைப் பாதுகாத்து வருகிறாரோ என்று நினைத்தேன். இருந்தாலும் அவரை நேரில் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவலாயிருந்தது. வழக்கம்போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு சென்று அவருடைய வீட்டை