பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ வழியில்லை!

265

"அந்த வழக்கம் இங்கிலாந்தில்தானே?" என்றேன்.

"ஏன், இந்தியாவில் மட்டும் யாராவது வேண்டா மென்றார்களாக்கும்!" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவள் நடையைக் கட்டினாள்; நான் தடுக்கவில்லை.

* * *

ந்தச் சோதனைக்குப் பிறகு என் உள்ளத்தில் புயல் வீச ஆரம்பித்து விட்டது. நண்பன் நாராயணனைப் பார்த்து, அவளை எனக்கு முன்பின் தெரியாதென்றும், நான் நடிக்கப் போகும் உதவி நாடகம் ஒன்றுக்கு டிக்கெட் விற்பதற்காக அன்று என்னைத்தேடி வந்திருந்தாளென்றும் ஒரு மகத்தான பொய்யைச் சிருஷ்டித்துச் சொன்ன பிறகு தான் என் மனம் ஒருவாறு நிம்மதியடைந்தது.

அதற்குப் பிறகாவது நாங்கள் ‘சும்மா இருப்பதே சுகம்' என்று இருந்துவிட்டோமா என்றால், அது தான் இல்லை!

இன்னதென்று தெரியாத அந்தச் சக்தி எங்களை மீண்டும் ஆட்டுவித்தது; நாங்கள் ஆடினோம்!

அதன்படி, மூன்றாவதாக இருவரும் ஏதாவது ஒரு பொது இடத்தில் சந்திப்பதென்ற முடிவுக்கு வந்தோம். அன்று மாலை ஆறரை மணிக்குக் குறிப்பிட்ட சினிமா ஒன்றுக்குச் செல்வதென்றும், ஒருவரையொருவர் எதிர் பாராமலே மேல்வகுப்புக்குச் சென்று விடுவதென்றும் தீர்மானித்தோம்.

என்னத்தைச் சொல்ல? நான் சினிமாவுக்குச் சென்றது அதுதான் முதல் தடவையல்ல; எத்தனையோ தடவை சென்றிருக்கிறேன். அவ்வாறு சென்றபோதெல்லாம் "எனக்குப் பின்னால் யார் வருகிறார்கள், என்னைச் சுற்றி யார் யார் நிற்கிறார்கள்?” என்றெல்லாம் நான் கவனித்ததே கிடையாது. அன்று என்னடாவென்றால், என்னுடைய கவனமெல்லாம் எனக்குப் பின்னால் வந்தவர்கள் மீதும், என்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் சென்றது.

"இதென்னசங்கடம்!" என்று எண்ணிக் கொண்டே டிக்கெட்டை வாங்கினேன். மாடிப்படி ஏறியதும் எனக்குப் பின்னால் ‘தடதட'வென்ற சத்தம் கேட்டது. "நம்மை யார் தொடர்ந்து