பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ வழியில்லை!

265


ன்றிரவுதான் விடிய விடிய நான் யோசித்தேன். அப்படியும் இப்படியுமாக ராஜ நடை நடந்த வண்ணம் யோசித்தேன்; கட்டிலில் உட்கார்ந்து வீட்டு முகட்டைப் பார்த்த வண்ணம் யோசித்தேன்; மல்லாந்து படுத்துக் கொண்டும் மண்டையைக் குடைந்து கொண்டும் யோசித்தேன். அதன் பயனாகத்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த தீர்மானத்திற்கு நான் வந்தேன். அதாவது “நாங்கள் இந்த உலகத்தில் வாழ வழியில்லை!" என்று.

உடனே என்னுடைய தீர்மானத்தை அவளுக்கு எழுதினேன் - வருத்தத்துடன்தான்!

என்னுடைய வருத்தத்தை அவள் பொருட்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, "இந்தப் பரந்த உலகத்தில் நாம் வாழ வழியா இல்லை? வழி இருக்கத்தான் இருக்கிறது. ஆனால், உங்களுக்கு என்மீது காதல்தான் இல்லை!" என்று அவள் எழுதியிருந்தாள்.

இதைப் படித்ததும் எனக்குச் 'சுருக்'கென்றது!

என்ன அக்கிரமம், இது எவ்வளவு பொல்லாதவள், அவள்

எனக்கு அவள்மீது காதல் இல்லையாமே!

ஒருவேளை அவள் சொல்வதும் உண்மையா யிருக்குமோ - அவ்வளவுதான்; என்னுடைய தீர்மானத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. அப்படியே அசந்து உட்கார்ந்துவிட்டேன். உட்கார்ந்து நெடுநேரம் ஆழ்ந்து யோசித்தேன் - ஆம் அவள் சொல்வது உண்மை; முற்றிலும் உண்மை; முக்காலும் உண்மை!

அவள்மீது எனக்கு உண்மையிலேயே காதல் இருந்தால், அந்தக் காதல் எந்தச் சக்தியைத்தான் எதிர்த்து நிற்காது?