பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன் கதைகள்

268

பின்பற்ற ஏனோ தயங்கினார். இல்லையென்றால் வைர வியாபாரியான அவருக்குப் பரலோகம் செல்ல வழியா தெரியாமலிருக்கும்?

எந்தவிதமான ஆசையும் இல்லாமலிருந்த அவருடைய உள்ளத்தில் சில நாட்களாக ஒரே ஒரு ஆசை மட்டும் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஆசை வேறொன்றுமில்லை. தானும் ஒரு மந்திரியாக வேண்டுமென்ற ஆசைதான் இந்த ஆசைக்குக் காரணம், ஏழைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பத்தில் தமக்குள்ள ஆர்வந்தான் என்று அவர் சொல்லிக் கொண்டார். இதைத் தவிர அவருடைய ஆசைக்கு வேறொரு காரணமும் இல்லையா என்று சில ‘சந்தேகப் பிராணி'கள் ஆராய ஆரம்பித்தார்கள். இத்தகைய தேசத் துரோகிகளைப் பார்க்கும் போதெல்லாம் செட்டியாருக்கு ஆத்திரம் பொங்கி வந்ததில் ஆச்சரியமென்ன?

இத்தனைக்கும் வைரவன் செட்டியார் அவசரக்காரர் அல்ல; எந்தக் காரியத்தையும் ஆற அமர யோசித்துச் செய்பவர். பெரியசாமியையும் சின்னச்சாமியையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் விஷயத்தில் கூட அவர் எத்தனையோ நாட்கள் யோசித்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் என்று தீர்மானம் செய்வதற்கு முன் அவர் ஒரு சின்னக் கணக்கும் போட்டுப்பார்த்தார். அதாவது, அவர்களுக்குப் பதிலாகப் பேஷா ராஜபாளையத்து நாய் ஒன்றை வாங்கி வளர்த்தால் என்ன செலவாகும் என்று எண்ணிப் பார்த்தார். அவ்வாறு எண்ணிப் பார்த்ததில் அந்த நாய்க்கு மாதம் முப்பது ரூபாய்க்கு குறையாமல் செலவாகும் என்று தெரிந்தது; அதுமட்டுமில்லை; இவர்களுக்கும் நாய்க்கும் எவ்வளவோ வித்தியாசமும் இருக்குமல்லவா?

நாய்க்கு என்ன தெரியும்? எஜமானைக் கண்டால் வாலை ஆட்டவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும் தெரியும். எஜமான் காரில் ஏறும்போதும் இறங்கும்போதும் கதவைத் திறந்துவிட அதற்குத் தெரியுமா? ஹாரன் சத்தத்தைக் கேட்டதும் அறில அடித்துக் கொண்டு ஓடி வந்து, பங்களாவின் கேட்டைத்திறந்து விட அதற்குத் தெரியுமா? 'ஏய்!’ என்று கூப்பிட்ட மாத்திரத்தில் ஓடோடியும் வந்து, ‘ஏன்சாமி' என்று மரியாதை செலுத்த அதற்குத் தெரியுமா? இன்னும் இரவில்துங்கினாயோ, உன்னை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ என்றும், 'நின்ற இடத்திலேயே நிற்காமற் போனாயோ விரட்டி விடுவேன்’ என்றும் நாயைப் பயமுறுத்த முடியுமா? - இப்படிப் பல