பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பொன்னையா

25

"வெள்ளம் வந்து என் வீட்டை அடிச்சுக்கிட்டுப் போயிட்டுதுங்க; அதைத் திருப்பிக் கட்டலாம்னா கையிலே காசில்லிங்க பனியிலே படுத்துப் படுத்துக் குழந்தை வேறே காயலாக் கிடக்குது. அதாலே உங்க வீட்டுத் திண்ணையிலாச்சும் கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னா, என்னமோ நாங்க பொழைச்சுப் போவோம்!”

இதைக் கேட்டதும் தர்மலிங்கத்துக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. பொன்னையாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. எதற்கும் தமது மனைவியுடன் கலந்து யோசித்துப் பார்க்கலாம் என்று எண்ணியவராய், "சரி நாளைக்கு வாடா” என்று சொல்லி அவனிடமிருந்து அந்த நிமிஷம் தப்பிவிட்டார்!

* * *

"த்மா பொன்னையாவின் வீடு வெள்ளத்திலே போயிடுத்தாம்; நம்ம வீட்டுத் திண்ணையிலே கொஞ்சம் இடம் வேணும்னு கேட்கிறான்" என்று எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக ஒடுக்கிக்கொண்டு, தன் மனைவியிடம் தாழ்மையோடு விண்ணப்பம் செய்து கொண்டார் தர்மலிங்கம்.

"ரொம்ப அழகாகத்தான் இருக்கு போயும் போயும் அந்தக் கீழ் ஜாதி நாயைக் கொண்டு வந்து..." என்று ஆவேசத்துடன் இரைய ஆரம்பித்து விட்டாள் அவள்.

"உஸ்..! யாராவது கேட்டுக்கொண்டே உள்ளே வந்து விடப் போகிறார்கள்!" என்று அவள் வாயைப் பொத்தினார் தர்மலிங்கம்.

அவள், வாசல் வரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்து, “யாரையும் காணோம்! - ஆமாம், அதற்கு நீங்கள் என்ன சொல்லித் தொலைத்தீர்கள்?’"என்று கேட்டாள்.

"என்னத்தைச் சொல்வது? 'எல்லோரும் ஒர் குலம்’னு எடுத்ததுக்கெல்லாம் தொண்டை கிழியக் கத்தும் நான் என் வீட்டுத் திண்ணையில் அவனுக்குக் கொஞ்சம் இடமில்லையென்றால்...?”

"அதற்கு நான் ஒரு வழி, சொல்கிறேன்?" என்று சொல்லிக் கொண்டே பத்மா ஒடோடியும் வந்து, அவர் காதோடு காதாக ஏதோ சொல்லி வைத்தாள்.

அதைக் கேட்டதும் தர்மலிங்கத்தின் முகம் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்தது. "அடியே! 'பெண் புத்தி பின் புத்தி' என்று சொல்கிறார்களே, அவர்களைக் கொண்டு போய் உடைப்பில்தான்