பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறும் சுதந்திரமும்

277

அடிமைத்தனத்தின்மேல் அவ்வப்பொழுது சுதந்திரம், ஜனநாயகம் என்பது போன்ற அழகான வர்ணங்களைப் பூசி, ஜாலவித்தை செய்து காட்டிக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்துக் கைதட்டி ஆரவாரம் செய்வதற்கும் சிலர் தயாராயிருப்பார்கள். ஆனால் எங்களைப் போன்ற அடிமைகள் - ஈன ஜன்மங்கள் மட்டும் எங்குமே, எப்பொழுதுமே இருந்திருக்க முடியாது!" என்றான் நீக்ரோ.

அவனுடைய குரலில் ஆத்திரத்தோடு அழுகையும் கலந்திருந்தது. பாவம், தனக்கும் கீழான அடிமை ஒருவன் இந்த உலகத்திலே இருப்பான் என்று அவன் அப்போது எதிர்பார்க்கவில்லை.

இந்தியன் ஒருமுறை லேசாகக் கனைத்துத் தன் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு "உங்களுடைய அடிமைத்தனத்தில் மட்டும் அப்படி என்ன விசேஷம் ஐயா?" என்று மீண்டும் பேச்சைஆரம்பித்து வைத்தான்.

"விசேஷமா ஒரு காலத்தில் பணம் படைத்த பாதகர்கள் ஆடுமாடுகள் போல எங்களைச்சந்தையில் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள் ஐயா, வாங்கிக் கொண்டிருந்தார்கள்!" என்று நீக்ரோ பொங்கி வந்த கோபத்தில் கத்தினான்.

அவனைத் தேற்ற இந்தியன் அலட்சியமாக "பூ! இவ்வளவுதானா?" எங்கள் தேசத்திலே எங்களையெல்லாம் விலை கொடுக்காமலே வாங்குகிறார்கள் என்றான்.

நீக்ரோவின் தலையில் இடிவிழுவது போலிருந்தது. ‘என்ன’ என்று அவன் வியப்பின் மிகுதியால் வாயைப் பிளந்தான்.

“ஆமாம், பெரிய பெரிய பண்ணையார்களிடம் நாங்கள் பரம்பரை பரம்பரையாகவே அடிமைகளாயிருப்போம். எங்கள் தாத்தா அடிமையா? - என் அப்பாவும் அடிமை; அப்பா அடிமையா? - நானும் அடிமை; நான் அடிமையா? - என் மகனும் அடிமை; மகன் அடிமையா? - என் பேரனும் அடிமை - இந்த ரீதியில் எங்களுடைய வாழ்நாட்கள் கழிந்து கொண்டிருக்கும். ஆனால் ‘அடிமை என்ற வார்த்தைக்கு எங்கள் நாட்டில் பலவித அர்த்தங்களுண்டு; அவற்றைக் கண்டு நாங்கள் சிரிப்பதுண்டு. எது எப்படி யிருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு அங்கே விலையும் கிடையாது, கிலையும் கிடையாது!" என்றான் இந்தியன்.

இந்த இடத்தில் நீக்ரோவுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, “ஆமாம், உங்களைத்