பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் கேள்வி

283


‘குழந்தைகிட்ட உன் கோவத்தைக் காட்டாதே முனியம்மா! அது பிஸ்கோத்துக்கு எங்கே போவும்? அதன் அப்பன்தான் எங்கே போவான்? என்றான் கிழவன்.

இந்தச் சமயத்தில் அவன் மகன் கண்ணுச்சாமி உள்ளே துழைந்து மெளனமாகச்சட்டையைக் கழற்றிக்கொடியில் போட்டான்.

அவனைக் கண்டதும் "ஏண்டா அப்பா, இவ்வளவு நேரம்" என்று கேட்டான் கிழவன்.

"சங்கத்திலே இன்னிக்கு ஒரு மீட்டிங்கு அதுக்குப் போயிருந்தேன்" என்றான்.கண்ணுச்சாமி.

"மீட்டிங்காவது, கீட்டிங்காவது! பொழுதோட வீட்டுக்கு வந்து சேராம.."

"அதெப்படி வந்துவிட முடியும்? ஸ்டிரைக் கமிட்டியிலே நானுமில்லே ஒரு மெம்பராயிருக்கேன்"

"என்னது அது, என்னது அது....”

"ஸ்டிரைக் கமிட்டியிலே..."

"ஸ்டிரைக்குமாச்சு, மண்ணுமாச்சு வேலை செய்யறப்பவே வயிற்றுச் சோத்துக்கு வழியைக் காணோம். ஸ்டிரைக்காம், ஸ்டிரைக்கு!"

"அப்படித்தான் நானும், இன்னும் என்னைச் சேர்ந்த தாலைந்து பேரும் சொன்னோம். நம்ம தலைவர்களும் அப்படித்தானே சொல்றாங்க - முதல்லே உற்பத்தியைப் பெருக்கி ஊர்லே இருக்கிற பஞ்சத்தை ஒழியுங்க; அதுதான் உங்க கடமை; அப்புறம் உங்க உரிமையைப் பற்றிப் பேசிக்கலாம்னு..."

"ஆமா, அதுவரை உடம்பிலே உசிரு இருந்தாயில்லே!" என்று முனியம்மாள் குறுக்கிட்டாள்.

"சீ, சும்மா யிரு: ஸ்டிரைக் சேஞ்சா மட்டும் உடம்பிலே உசிரு வந்துடுமா? இருக்கிற உசிருமில்லே போயிடும்?”

"பொம்பளைக்கு என்னத்தைத் தெரியும்? நீ விசயத்தைச் சொல்லு" என்றான் எல்லாம் தெரிந்த ஆண்பிள்ளையான கிழவன்.

"என்னத்தைச் சொல்றது? கமிட்டியிலே எங்க கட்சிக்குப் பலமில்லே, ஸ்டிரைக் செய்யணும்னு சொல்ற கட்சிதான் ஜெயிச்சுடும்போல இருக்குது"