பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாறுதல் இல்லை

313



"அதற்கும் ஒரு வழி செய்யப் போகிறார்கள். அதாவது உங்களை யெல்லாம் கட்டாயமாக இன்ஷ்யூரன்ஸ் செய்து கொள்ளச்சொல்லப் போகிறார்கள்!”

"அப்படின்னா...?”

"நீ திடீரென்று செத்தால் உன் பெண்டாட்டி பிள்ளைகள் பிழைத்துக் கொள்வதற்கு ஏதாவது பணம் கிடைக்கும்."

"உசிராயிருக்கிறப்போ..."

"ஒன்றும் கிடைக்காது!”

"சரி, அப்படின்னா அதையும் விட்டுத் தள்ளுங்க"

"சரிசரி நீ இப்படியே பேசிக்கொண்டு போனால், நான் உன்னையே விட்டுத் தள்ள வேண்டியதாய்த்தான் இருக்கும்!" என்பேன் நான்.

செங்கண்ணன் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்.

* * *

ன்று எதிர்பாராதவிதமாகச் செங்கண்ணன் தம்பதிகளுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குக் குறைவில்லாத வேலை கிடைத்தது. அவர்களுக்கு மட்டும் என்ன? அங்கிருந்தவர்கள் எல்லோருக்குமே கிடைத்தது. பிரபல காண்ட்ராக்டரான கச்சாபகேசனின் ஆட்கள் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். செங்கண்ணன் சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமா? "அப்பாடா! ஆறு மாசத்துக்குக் கவலையில்லை!” என்று எண்ணி அவன் ஒரே ஆனந்தத்தில் மூழ்கி விட்டான்.

அந்த ஆனந்தம் அன்று மாலை அவன் என்னைச் சந்திக்க வந்தபோதும் இருந்தது. வந்ததும் வராததுமாக "இந்தாங்க, நாலணா!" என்று அவன் என்னிடம் ஒரு நாலணாக் காசை எடுத்துக் கொடுத்தான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; “இந்தக் காசு எதற்கு?" என்று கேட்டேன்.

"சும்மா வச்சி வையுங்கோ இப்படித் தினந் தினம் ஒரோரு நாலணாவா உங்ககிட்ட கொடுத்துக்கிட்டு வரேன்; எல்லாத்தையும்