பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஏழையின் குற்றம்

45

கூட்டி, “ஐயோ, ஏழைகள் ஐயோ, ஏழைகள்!" என்று அலற ஆரம்பித்தார். அவருடைய கூச்சலைக் கேட்டுக் கோஷம் செய்ய ஒரு சிறு கும்பலும் சேர்ந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? தாலுகா போர்டு மெம்பரானார்; பாங்கின் டைரக்டரானார்; பல கம்பெனிகளின் கூட்டு முதலாளியானார்; யுத்தக் கமிட்டியின் தலைவரானார்; கவர்னர் துரையை அடிக்கடி நெருங்கினார். இதனாலெல்லாம் அவருடைய ‘கறுப்பு மார்க்கெட்' விஷயம் அதிகாரிகளின் காதில் விழாமல் போயிற்று. தப்பித் தவறி விழுந்தாலும் அந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டாமல் போயிற்று.

* * *

செட்டியாரின் நிலை இப்படியென்றால் சின்னசாமியின் நிலை வேறாயிருந்தது. அவனுக்கு அஞ்சலை என்றொரு தங்கை. பிரசவத்துக்காக அவள் தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாள். குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகி விட்டது. அவள் கணவன் தன் மனைவியை அனுப்பி வைக்கும்படி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். தாயும் பிள்ளையுமாக வெறுமனே எப்படி அனுப்பி வைப்பது? அந்தக் குழந்தையின் கால்களுக்கு ஒரு ஜதை வெள்ளிக்காப்புக்களாவது வாங்கிப் போட வேண்டும்; அஞ்சலைக்கு ஐந்து ரூபாயிலாவது ஒரு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்; இவை கூட இல்லாமல் சென்றால் அஞ்சலையின் மாமியார் சும்மா இருப்பாளா?

ஆனால், அவற்றிற்கெல்லாம் குறைந்தது பத்து ரூபாயாவது வேண்டுமே - இதுதான் சின்னசாமியின் தற்சமயக் கவலை, லட்சியம், மனோரதம், எண்ணம், ஆசை எல்லாம்!

இந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவன் என்னவெல்லாமோ யோசனை செய்து, கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டான். அந்தத் தீர்மானத்தின்படி, தான் மாலை வேளையில் வழக்கமாகத் தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று, ‘'என்ன, நாயர் சர்க்கரை ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்டான்.

"இருந்தா இப்பவே கொடு, அப்பேன் வீசை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கிறேன்!” என்றான் நாயர்.

"தினசரி ஒரு வீசை சர்க்கரை, விலை ஒரு ரூபாய். பத்து நாட்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தால் பத்து ரூபாய். அடே, அப்பா போதுமே நமக்கு

* * *