பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுயநலம்

55

"என்ன பண்றது, சாமி எனக்கு வேறே வேலை ஒண்ணுந் தெரியாது; இந்தக்கட்டிலைக் கட்டிக் கொண்டு அழத்தான் தெரியும்!” என்றான் வேலப்பன்.

இப்பொழுது தான் மாதவராயருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. “அப்படியானால் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்கிறாயா?” என்று ஆரம்பித்தார்.

"உங்கள் சொல்லைக் கூட நான் தட்டுவேனுங்களா?”

"சரி, நீயும் கொஞ்சம் பணம் போடு; நானும் கொஞ்சம் பணம் போடுகிறேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து இதே இடத்தில் இந்த மாந்தோப்பை அழித்து விட்டு ஒர் அழகான கட்டிடம் கட்டலாம். சம்பளத்துக்கு வேண்டிய ஆட்களை வைத்துக் கொள்ளலாம். கட்டில்களை வேண்டிய அளவு உற்பத்தி செய்யலாம். அவைகளுக்கு அழகான வர்ணப் பூச்சு, கண்ணைக் கவரும் ‘வார்னிஷ்’ வேலையெல்லாம் செய்து, காட்சி அறையில் வரிசைக் கிரமமாக நிறுத்தி வைக்கலாம். விலையை எவ்வளவு கூட்ட முடியுமோ, அவ்வளவு கூட்டிக் கொள்ளலாம். போட்டிக்கு யாரும் வந்து விடாமல் ‘நம்மைப்போல் யாரும் கட்டில்கள் செய்யக்கூடாது’ என்று சர்க்கார் மூலம் உத்தரவாதம் பெற்றுக் கொள்ளலாம். பத்திரிக்கைகளிலும், ரயில் - டிராம்களிலும் விளம்பரம் செய்யலாம். இந்தியா முழுவதும் ஏஜண்டுகளை நியமித்துக் கட்டில்களை அனுப்பி வைக்கலாம். வேண்டியவர்கள் அங்கங்கே வந்து வாங்கிக் கொள்ளட்டும். கிடைக்கும் லாபத்தை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது என்று நீ சொல்வதாயிருந்தால் இந்த மாந்தோப்பை நீயே வாங்கிக் கொள்; கம்பெனியையும் நீயே வைத்துக் கொள்; லாபத்தையும் நீயே அடைந்து கொள். எப்படியாவது நீ செளகரியமாயிருந்தால் அதுவே எனக்குப் போதும்’ என்று சொல்லி, மாதவராயர் தமக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். காரணம்: அவனா நம்முடன் பணம் போடப் போகிறான்" என்ற நினைப்புத் தான்.

வேலப்பனும் அவர் எதிர்பார்த்த பதிலையே சொன்னான். "என்ன சாமி, கேலி பண்றீங்க? எனக்கு ஏது சாமி அதுக்கெல்லாம் பணம்?" என்றான்.

"அப்படியானால் நானே பணம் போடுகிறேன். நானே கம்பெனி வைக்கிறேன். உனக்கு ஒரு தொல்லையும் வேண்டாம். பேசாமல் வேலை பார்த்துவிட்டு மாதம் பிறந்தால் முழுசா ஐம்பது ரூபாய்