பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

விந்தன் கதைகள்

சம்பளம் வாங்கிக் கொள். ராஜா மாதிரி இருந்து கொண்டு முருகாயியையும் ராஜாத்தி மாதிரி வைத்துக் கொள். என்ன சொல்கிறாய்?" என்று தாம் வந்த காரியத்தை முடித்தார்.அவர்.

அவன் ஒன்றும் யோசனை செய்யவில்லை; யோசனை செய்வதற்கு வேண்டிய அறிவுதான் இந்த அரசாங்கத்தில் அவனைப் போன்ற ஏழைகளுக்கு ஏது?

"அப்படியே ஆகட்டும் சாமி" என்று ஆமாம் போட்டு விட்டான்.

* * *

தேவைக்கு அதிகமான பணத்தை வைத்துக் கொண்டு செய்வது இன்னதென்று தெரியாமல் திகைப்பவர்கள் ஒரு பக்கமும், கஞ்சிக்குக் காசில்லாமல் கண் கலங்குவோர் இன்னொரு பக்கமும் வாழும் இந்தப் படுமோசமான நாட்டிலே பணக்காரன் நினைத்தால் நடக்காதது எது?

மறுநாளே மாந்தோப்பு அழிக்கப்பட்டது; அதே இடத்தில் சில நாட்களுக்கெல்லாம் ஒர் அழகான கட்டிடம் எழுந்தது. வேலைக்கு ஆள் தேவை’ என்று சொன்னதுதான்தாமதம்; ஒருவேளை உணவுக்கு வழி கிடைத்தால் போதும் என்று எத்தனையோ நாட்களாக ஏங்கிக் கிடந்த ஏழைக் கூட்டம் - தனிப்பட்ட ஒரே ஒரு மனிதனின் ஏகபோக வாழ்விற்காகத் தங்கள் உடலையும் உயிரையும் தத்தம் செய்வதற்கென்றே அந்தக் கருணை மிகுந்த கடவுளால் கோடிக்கணக்கில் சிருஷ்டி செய்யப்பட்டிருக்கும் கூட்டம் - திமுதிமு: வென்று வந்து சேர்ந்தது.

வேண்டிய ஆட்களை எடுத்துக் கொண்டார்கள்; வேலையும் தொடங்கி விட்டார்கள்; கட்டில்கள் கட்டிவிட்டார்கள்; நாடெங்கும் அனுப்பிவிட்டார்கள். சர்க்கார் அதிகாரிகளும் மாதவராயரின் வேண்டுகோளுக்கிணங்கி, "இந்தியாவிலேயே நீங்கள் மட்டும் தான் இம்மாதிரிக் கட்டில்கள் செய்து ஊரைக் கொள்ளையடிக்கலாம்; அந்தக் கொள்ளையில் வரியின் மூலம் எங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்கள். போட்டிக்கு யாராவது வந்தால் எங்களிடம் சட்டம் இருக்கவே இருக்கிறது!” என்று உத்திரவாதம் அளிந்துவிட்டார்கள்.

ஆமாம்; அந்தக் கட்டில்களுக்கு ஆதி கர்த்தாவான வேலப்பன் கூட இனிமேல் மாதவராயரின் அனுமதியின்றி அம்மாதிரிக் கட்டில்கள் செய்ய முடியாது!